புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்றால் அலுவலகம் மூடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை அருகே விசாரணைக் கைதிக்கு தொற்று ஏற்பட்டதால், அவசரமாக மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலூகா, மாங்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய விசாரணைக் கைதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், சுகாதாரத் துறையினர் அவரை ஆம்பூலன்சில் மருத்துவமனைக்கு சிசிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.