ஏப்ரல் 22, 2021, 7:32 மணி வியாழக்கிழமை
More

  அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

  ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.

  IMG-20200812-WA0001
  IMG-20200812-WA0001

  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். கேன்சர் மூன்றாவது நிலையில் இருப்பதாக சஞ்சயின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தார்கள். அதனால் உடனடி மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியின்றி சிரமப்பட்டார். மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் சஞ்சயின் நெருங்கிய நண்பர்கள் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

  IMG-20200812-WA0003
  IMG-20200812-WA0003

  அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தினர். ஆனால் நெகட்டிவ் என்று வந்தது. ஆனால் மருத்துவர்கள் சஞ்சய்க்கு அனைத்து வித டெஸ்டுகளும் செய்தார்கள். அந்த ரிப்போர்ட் செவ்வாயன்று வந்தன. இந்த பரிசோதனையில் சஞ்சய்தத்துக்கு நுரையீரலில் கேன்சர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகூட ஸ்டேஜ் த்ரீயில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். தற்போது சஞ்சய் தத்தின் வயது 61.

  சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர் இருப்பதாக தெரிந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் பாலிவுட் ஹங்காமா என்ற சேனலுக்கு தெரிவித்தார்கள். விரைவிலேயே அவர் சிகிச்சைக்காக யூஎஸ் செல்ல உள்ளார் என்று கூறினார்.

  IMG-20200812-WA0000
  IMG-20200812-WA0000

  சஞ்சய் தத்தின் நண்பர் ஒருவர் பாலிவுட் ஹங்காமா சேனலிடம் பேசுகையில், ‘பாபா ஒடிந்து போய்விட்டார். அவருக்கு சின்ன குழந்தைகள் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தற்போது துபாயில் தாயோடு உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பயங்கரமான விஷயத்தை கூறுவது ஒரு அக்னி பரிட்சை போன்றது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

  ஆனால் சஞ்சய்தத்துக்கு வந்துள்ள கேன்சர் சரி ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவருடைய நண்பர் கூறினார். ஆனால் சிகிச்சைக்காக உடனடியாக அவர் அமெரிக்கா செல்ல வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.

  மறுபுறம் சஞ்சய் தத் கூட செவ்வாயன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். சிகிச்சைக்காகத் தான் சினிமா ஷூட்டிங்களில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொள்ள போவதாக சஞ்சய்தத் குறிப்பிட்டார்.

  IMG-20200812-WA0002
  IMG-20200812-WA0002

  தன் குடும்பம், நண்பர்கள் தமக்கு துணையாக உள்ளார்கள் என்றும் தன் நலம் விரும்பிகள் எந்த ஒரு பரபரப்பும் அடைய வேண்டாம் என்றும் கூறினார். ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் தனக்கு கேன்சர் இருப்பதாக அவர் தெரிவிக்கவில்லை.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »