Homeஇந்தியாபெங்களூர் கலவரத்தை திட்டமிட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முசாமில் பாஷா கைது!

பெங்களூர் கலவரத்தை திட்டமிட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முசாமில் பாஷா கைது!

sdpi-muzhamil-pasha1
sdpi-muzhamil-pasha1

பெங்களூரு கலவரம்: இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ., யின் தலைவர் முசாமில் பாஷா, கும்பல் வன்முறையின் சூத்ரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார்

எஸ்.டி.பி.ஐ தலைவர் முசாமில் பாஷா செவ்வாய்க்கிழமை இரவு டி.ஜே.ஹல்லி காவல் நிலைய பகுதியில் புதன்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்ற கொடிய கும்பல் வன்முறையின் சூத்ரதாரி என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமது நபியை குறிப்பிட்டு இழிவு படுத்தியதாகக் கூறி வன்முறையில் இறங்கிய முஸ்லீம் கல்வர கும்பலை தடுத்து நிறுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது; தீ வைத்தது! காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு மற்றும் அருகிலுள்ள டி.ஜே.ஹல்லி காவல் நிலையத்தில் தீ வைத்தது. இந்த கும்பல் அருகில் உள்ள வீடுகளை சூறையாடியது, போலிஸ் வாகனங்களை எரித்தது! போலீசார் மீது கற்களை வீசியது.

எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச மூர்த்தியின் நெருங்கிய உறவினர் பி.நவீன் செய்த பேஸ்புக் பகிர்வுக்கு, மிகப் பெரும் அளவில் வன்முறையை திட்டமிட்டிருக்கிறார் எஸ்டிபிஐ., தலைவர்.

sdpi-muzhamil-pasha
sdpi-muzhamil-pasha

வரவிருக்கும் பிபிஎம்பி தேர்தல்களுக்கு முன்னதாக சமூக வாக்குகளை கவரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வன்முறை சம்பவம் திட்டமிடப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

எஸ்.டி.பி.ஐ தனது வேட்பாளர் முஜாஹித் பாஷா சிக்க்பே சட்டசபை தொகுதியின் சித்தபுரா வார்டு எண் 144 ஐ வென்றதன் மூலம் பெங்களூரில் தனது இருப்பைக் காட்ட முயற்சிக்கிறது.

கிழக்கு பெங்களூரில் உள்ள டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி பகுதியில் உள்ள இரண்டு காவல் நிலையங்களையும் தரைமட்டமாக்க கலவரக்காரர்களைத் தூண்டுவதற்காக மற்றொரு எஸ்.டி.பி.ஐ செயற்பாட்டாளர் அயாஸும் விசாரணை வளையத்தில் உள்ளார்.

வன்முறைக்கு முன்னதாக ஒரு நபர் கலவரக்காரர்களுக்கு பணம் விநியோகிப்பதாகக் காட்டப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி்யுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள், போலிஸ் நிலையத்திற்கு எதிரான தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட செயலாக இருந்தன! ஏனெனில் கலவரக்காரர்கள் ஏற்கெனவே சமூக ஊடக பதிவுகள் மூலம் அணி திரட்டப்பட்டனர்.

லாக் டவுனுக்கு முன்னதாக டி.ஜே.ஹல்லியில் உள்ள பிலால் பாக், டெல்லியில் ஷாஹீன் பாக் தொடர்ந்த CAA எதிர்ப்பு மற்றும் NRC எதிர்ப்பு தளத்தின் மையமாக உருவெடுத்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,120FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,214FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...