உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாகக் களம் இறங்கி முதலில் ஆடியது அந்த அணி, துவக்கத்தில் தடுமாறியது. முதல் இரண்டு விக்கெட்கள் 24 ரன்களைக் கடப்பதற்குள் விழுந்துவிட்டன. இதனால், அணியின் ரன் வேகம் பெரிதும் மட்டுப் பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேஷாத் 5 ரன்னிலும், அஹ்மத் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சொஹெல் 41 ரன் எடுத்தார். இதுதான் இன்று அணியில் எடுக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோர். அடுத்து மிஸ்பா உல் ஹக் 34 ரன் எடுத்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல் ரவுண்டர் அப்ரிதி 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு மிக எளிய இலக்காக 214 ரன்னை நிர்ணயித்தது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari