ஏப்ரல் 22, 2021, 7:45 மணி வியாழக்கிழமை
More

  குடி கெடுத்த குடி! தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்!

  குற்றவாளிகள் இருவருமே மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்புவோம்

  drunk
  drunk

  தெலங்காணா… தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்.

  மதுவுக்கு அடிமையாகி தினமும் தொல்லை கொடுத்த தந்தையை மகள்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். சில வருடங்களாக தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளோரை தொல்லை செய்வதும் பலமுறை அவமதித்து வன்முறைக்கும் முயற்சித்த தந்தையின் நடத்தை பிடிக்காமல் இரு பெண்களும் சேர்ந்து அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

  ஹைதராபாத் ஜெகத்கிரிகுட்டா சீசலபஸ்தியில் திங்களன்று இரவு இந்த சம்பவம் நேர்ந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் கங்காரெட்டி தெரிவித்த விவரங்கள்…

  சீசலபஸ்தியில் வசித்துவரும் ராஜூ (45) தினக்கூலி. அவருக்கு இரு மகள்கள். பெரிய மகள் இன்டர்மீடியட். சின்ன மகள் எட்டாவது படித்து வருகிறார்கள். தாய் அண்மையில் இறந்து போனதால் தந்தையோடு மகள்கள் வசித்து வருகின்றனர்.

  குடிக்கு அடிமையான ராஜு தினமும் குடித்துவிட்டு வருவதும் மகள்களை தொல்லை செய்வதுமாக இருந்து வந்தார். சிலமுறை வன்முறைக்கு கூட முயற்சித்தார். தந்தை செய்யும் கொடூரங்களை மகள்கள் பயத்தோடு பொறுத்திருந்தனர். திங்களறன்று இரவு குடித்த மயக்கத்தில் மகள்களிடம் சோறு போடும்படி கூறி அடித்து துன்புறுத்தினார். அதனால் எரிச்சல் அடைந்த இருவரும் தந்தையை கொல்ல வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்தார்கள். குடித்த மயக்கத்தில் படுத்திருந்த தந்தைக்கு நள்ளிரவில் கழுத்தில் சுருக்கிட்டு கொன்று விட்டார்கள்.

  மறுநாள் காலையில் ராஜுவின் நண்பர் வந்து பார்த்து போலீசாருக்கு தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் இருவருமே மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »