ஏப்ரல் 22, 2021, 7:19 மணி வியாழக்கிழமை
More

  சுதந்திர தின விழா: கொரோனா தடுப்புப்பணி ஆற்றிய 27 பேருக்கு பதக்கம்!

  tn-cm

  சுதந்திர தின விழாவில், முதன் முறையாக, கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், பல்வேறு துறைகளில், முன்களப் பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழை, முதல்வர் வழங்கவுள்ளார்.

  விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, தங்க முலாம் பூசிய பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

  விருது பெற உள்ளவர்கள் விபரம்: சுகாதாரத் துறைசென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன்;

  விருதுநகர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் உமாமகேஸ்வரி;

  அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் சதீஷ்குமார்

  ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செவிலியர் ராமுதாய்;

  அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை செவிலியர் கிரேஸ் எமைமா;

  கோவை, ஈ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, செவிலியர் கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி.

  மாநில சுகாதார ஆய்வகம் துணை இயக்குனர் ராஜு;

  கோவை சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார்;

  திண்டுக்கல் மாவட்டம், பழனி சுகாதாரப் பகுதி ஆய்வக நுட்புனர் ஜீவராஜ் காவல் துறை

  திருச்சி, மணப்பாறை காவலர் சையித் அபுதாகீர்;

  விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி;

  சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

  தீயணைப்புத் துறை நாகர்கோவில் தீயணைப்பு வாகன ஓட்டுனர் துரைராபின்;

  பெரம்பலுார் மாவட்டம் முன்னணி தீயணைப்பு வீரர் பழனிசாமி;

  சென்னை, மணலி முன்னணி தீயணைப்பு வீரர் கருணாநிதி

  நகராட்சி துறைமாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி;

  கொடைக்கானல் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம்;

  சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கலையரசன்.

  திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் பேரூராட்சி துாய்மைப் பணியாளர் ஏசுதாஸ்;

  சென்னை மாநகராட்சி துாய்மைப் பணியாளர் ஜெய்சங்கர்; ஈரோடு மாநகராட்சி துாய்மைப் பணியாளர் சங்கர்

  வருவாய் துறைகுன்றத்துார் தாசில்தார் ஜெயசித்ரா;

  மேட்டூர் மண்டல துணை தாசில்தார் ஜெயந்தி;

  விருதுநகர் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரத்விராஜ்

  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசென்னை, மயிலாப்பூர், அடையாறு பகுதி கடை பட்டியல் எழுத்தர் தியாகமூர்த்தி.

  தாம்பரம், பார்வதி நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை விற்பனையாளர் ரமாமணி;

  விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கம் கடை விற்பனையாளர் தமிழ்செல்வன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »