ஏப்ரல் 22, 2021, 6:40 மணி வியாழக்கிழமை
More

  ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர்! தொப்பையால் கிடைத்த நன்மை!

  Screenshot_2020_0814_091413

  சீனாவின் ஹெனன் மாகாணத்தை சேர்ந்தவர் 28 வயதான லியு. அவர் வீட்டு பின்புறத்தில் இருந்த சிறிய ஆழ்துளை கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து சிக்கிக் கொண்டுள்ளார்.

  உடனடியாக அவரை மீட்க அந்த பகுதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து பேர் விரைந்துள்ளனர். அந்த கிணறு மிக குறுகிய கிணறாக இருந்ததால் கிணற்றுக்குள் விழாமல் உயிர் தப்பியுள்ளார் லியு.

  அவரது குண்டான உடல் வாகு தான் கிணற்றுக்குள் லியு விழுந்தும் உள்ளே செல்லாமல் இருக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அவரை காத்த தீயணைப்பு வீரர்கள்.

  Screenshot_2020_0814_091428

  ‘லியு கிணற்றில் மிக இறுக்கமாக சிக்கியிருப்பதை நாங்கள் அவரை பார்த்ததும் புரிந்து கொண்டோம். அவரை மீட்க கயிறுகளை பயன்படுத்தினோம். முற்றிலும் பாதிப்பு ஏதும் இல்லாமல் அவரை மீட்டெடுத்தோம். லியுவின் மொத்த உடல் எடை சுமார் 500 பவுண்டுகள் இருக்கும்’ என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

  Screenshot_2020_0814_091357

  மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள லியு கிணற்றில் குதித்ததாகத் தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் லியுவை தீயணைப்பு வீரர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »