ஏப்ரல் 21, 2021, 7:24 மணி புதன்கிழமை
More

  மும்பை கனவை நிறைவேற்ற பச்சைக் குழந்தையை விற்ற தாய்!

  அதற்குள்ளே விஷயம் போலீஸுக்குத் தெரிந்ததால் அவரோடு கூட மற்றும் ஐந்து பேரையும் கைது செய்தார்கள்.

  hyderabad-woman-allegedly-sold-her-2-month-old-child
  hyderabad-woman-allegedly-sold-her-2-month-old-child

  மும்பை கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஹைதராபாதில் பச்சைக் குழந்தையை விற்ற தாய். விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  அவருடைய வயது 22. ஒரு சிசுவுக்கு தாய். கணவரோடு ஏற்பட்ட வேறுபாட்டால் பிரிந்து தனியாக வாழ்கிறார். அந்த நேரத்தில் பொருளாதார சிரமங்கள் அவரை திக்குமுக்காடச் செய்தன. மேலும் மும்பை செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசையும் அவரை துரத்தியது.

  இவை அனைத்திற்கும் ஒரே பரிகாரம் என்ன என்று யோசித்தார். பச்சைக் குழந்தையை யாருக்காவது விற்றுவிட்டு அந்தப் பணத்தால் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். நினைத்தபடியே ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதற்குள்ளே விஷயம் போலீஸுக்குத் தெரிந்ததால் அவரோடு கூட மற்றும் ஐந்து பேரையும் கைது செய்தார்கள்.

  ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இந்த சம்பவம் நடந்தது.

  habeebnagar-police-station
  habeebnagar-police-station

  ஹைதராபாதில் உள்ள நாம்பல்லியைச் சேர்ந்த ஜோயா கான் (22 ) சில மாதங்கள் முன்பு ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். ஆனால் கணவரோடு வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக இருக்கிறார். வேலையும் இல்லாமல் யாரிடமிருந்தும் உதவியும் கிடைக்காமல் பிள்ளையை வளர்ப்பது அவருக்கு கடினமாக இருந்தது.

  மேலும் எப்போதிலிருந்தோ அவருக்கு மும்பை போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் குழந்தையை யாருக்காவது விற்றுவிட்டு அந்தப் பணத்தோடு தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார். சஞ்சல்கூடாவைச் சேர்ந்த ஆயிஷா ஜபீன் (28) என்ற பெண்ணுடன் ரூ 45 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தையை விற்று விட்டார்.

  ஜெபீன் தாயார் ஷமீம் பேகம் (50), ஷமீம் சகோதரி சிராஜ் பேகம் (51), இடைத்தரகர்கள் எஸ்கே முஹம்மது (30), அவன் மனைவி தஜஸ்ஸும் (25) இதற்கு உதவியுள்ளார்கள். ஆகஸ்ட் 11ஆம் தேதி இதுகுறித்து ஹபீப் நகர் போலீசாருக்கு ஜோயாகான் கணவர் அப்துல் முஜாஹித் (29) புகார் அளித்தார்.

  சபூன்புராவில் உள்ள தருவாலா பார் அண்ட் ரெஸ்டாரண்டில் அவர் மேனேஜர் ஆக பணிபுரிகிறார். இரண்டு மாதங்களான தன் குழந்தையை தன் மனைவி ஜோயாகான், அகம்மது, தபஸ்ஸும் பேகத்திற்கே விற்று விட்டதாக அப்துல் மஜுஹத் தெரிவித்தார். இதனால் போலீசார் ஜோயாவை கைது செய்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

  இது குறித்து ஹபீப் நகர் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரா பேசுகையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மஜுஹித் அவர் மனைவி ஜோயா இடையில் ஏதோ சிறிய விஷயத்தில் தகராறு வந்தது. அதனால் மஜுஹித் மனைவி ஜோயாவையும் மகனையும் விட்டுவிட்டு எம்எஸ் மக்தாவில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

  அதனால் ஜோயா தீவிர வருத்தத்திற்கு ஆளானார். மகனை வளர்ப்பதற்கு தன்னிடம் பணம் இல்லாததால் தன் பச்சைக் குழந்தையை விற்பதற்கு முன் வந்தார் என்று தெரிவித்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »