
தில்லியில் வசிக்கும் 18 வயதான வாலிபர் லக்ஷய பிந்திராவுக்கு தினமும் ஜிம்முக்கு போகவில்லையென்றால் தூக்கம் வராது .இதனால் அவர் தினமும் காலை மாலை இருவேளையும் ஜிம்முக்கு போய் உடலை ஜம்மென்று வைத்திருக்க முயன்றார் .
இந்நிலையில் இந்த கொரானா வைரஸ் நாடு முழுவதும் பரவியதன் காரணமாக ஜிம்களை அரசாங்கம் மூட சொன்னது. இதனால் மூன்று மாதமாக லக்ஷன் பிந்திராவுக்கு ஜிம்க்கு போய் உடறயிற்சி செய்ய முடியவில்லை
பிறகு மூன்று மாதத்திற்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஜிம் திறந்ததும் அவர் ஜிம்முக்கு சென்று மூன்று மாத பயிர்சியையும் சேர்த்து அவர் உடற் பயிற்சி செய்தார் .
இதன் காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதில் அவரை டாக்டரிடம் கூட்டி சென்றார்கள் .அப்போது அவரை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர் , அவரின் இரண்டு கிட்னியும் செயலிழந்து போனதை கண்டு திடுக்கிட்டனர். .இதனால் அவருக்கு உடனே டயாலிசில் சிகிச்சை தொடங்கப்பட்டது .இப்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் டாக்டர்கள் மூன்று மாத உடற்பயிர்சியை சேர்த்து வைத்து இளைஞர்கள் செய்யக்கூடாதெனவும் மேலும் தகுந்த மாஸ்டர் உதவியோடு எந்த பயிற்சியையும் செய்ய வேண்டுமெனவும் , அப்போது தான் எந்த பக்க விளைவும் உண்டாகாது என்றும் கூறினார்கள் .