29/09/2020 11:05 AM

தொழிலாளியை அடித்துக் கொன்ற திருநங்கைகள்!

சற்றுமுன்...

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சீமான் அனுமதி

  உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...

மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Screenshot_2020_0818_145926

ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவர்கள் இதுகுறித்து திருநங்கைகளிடம் கேட்டபோது, அவர்கள் 3 பேரும் சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் அளித்ததால், மருத்துவர்கள் உடனடியாக ராமநகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் 3 திருநங்கைகளிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த ராஜேந்திரா, மாலையில் வேலை முடிந்தவுடன் திருநங்கை போல வேடமிட்டு பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார். அதனால் திருநங்கைகள் ஆன தேவி, பாவனா, நித்யா ஆகிய மூவருக்கும் வருமானம் குறைந்துள்ளது. அதுமட்டுமன்றி இராஜேந்திரா, திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று வந்ததை மூவரும் அறிந்துள்ளனர்.

Screenshot_2020_0818_145856

இந்நிலையில் நைஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த ராஜேந்திராவிடம், திருநங்கைகள் 3 பேரும் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் ஒன்றாக இணைந்து ராஜேந்திராவை பலமாக தாக்கியுள்ளனர். அதனால் மயக்கமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அதனால் மூன்று திருநங்கைகளும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

சம்பவம் பற்றி ராமநகர் காவல்துறையினர், எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்னர் ராம நகருக்குச் சென்ற எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினரிடம் 3 திருநங்கைகளையும் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மூன்று திருநங்கைகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

கலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்!

தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க "சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »