27/09/2020 10:42 PM

தமிழக முதல்வர் ஓபிஎஸ்: துணை முதல்வர் இபிஎஸ்! மீண்டும் சர்ச்சை போஸ்டர்!

சற்றுமுன்...

செப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு!

இதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது

பிரதமர் மோடியின் மனதின் குரல்! கதைகள் வாயிலான கலாசாரம்!

தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

இந்த அறிகுறிகள் இருந்தா… உடனடியா மருத்துவ மனையை அணுகுங்க: தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும்

எஸ்பிபி.,யா? எஸ்ஆர்பி.,யா? கூட்டுறவுத் துறை உளறலை வனத்துறை சரி செய்ய… அதிர்ந்த செய்தியாளர்கள்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல்
Screenshot_2020_0819_092349

ஓபிஎஸ்சை முதல்வராகவும், இபிஎஸ்சை துணை முதல்வராகவும் குறிப்பிட்டு, அவர்களது கட்சிப் பொறுப்புகளையும் மாற்றி, திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமையில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் வேட்பாளர் தாங்கள்தான் என கடந்த வாரம் போஸ்டர் சண்டையில் ஈடுபட்டனர்.

துணை முதல்வரின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அவரது தொகுதியான போடியில், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. மூத்த அமைச்சர்களின் பல மணிநேர சமரசத்திற்கு பிறகு முதல்வர் வேட்பாளர் பிரச்னை சற்றே ஓய்ந்தது.

தற்போது அதிமுக சார்பில் மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், மேற்கு மாவட்டச் செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜசேகரன் ஆகியோரை வாழ்த்தி திண்டுக்கல் பகுதியில் அவர்களது ஆதரவாளர்களால் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில், ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக முதல்வர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை தமிழக துணை முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அதிமுகவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெயர் தவறுதலாக மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பில் காரணம் கூறப்பட்டாலும், இது வேண்டுமென்றே நிகழ்ந்ததாகவே திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிமுகவில் நடந்து வரும் அதிகார போட்டி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன், துவக்கத்தில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது உடனிருந்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது இவர் எடப்பாடி அணியுடன் நெருக்கம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இவருக்கும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த முறை தனது நத்தம் தொகுதி மாற்றப்பட்டதற்கும், கட்சியில் ஓரங்கட்டப்பட்டதற்கும் திண்டுக்கல் சீனிவாசனே காரணமென தொடர்ந்து புகார் கூறி வந்தார்.

இந்த சூழலில் மாவட்டத்தை பிரித்து நத்தம் விஸ்வநாதனை திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்த அதிருப்தியில், அமைச்சரின் ஆதரவாளர்கள் இவ்வாறு ஒட்டியிருக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஈவேரா., முன்னிலையில்… ஜெயகாந்தனின் ‘தைரிய’ உரை வீச்சு!

நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத

சமையல் புதிது.. :

சினிமா...

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »