அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில்
பக்தர்கள் மழைவேண்டி பால் அபிஷேகம் செய்து கூட்டுபிரார்த்தனை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில்
அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக விஸ்வருப ஆஞ்சநேயர்கோயில்
உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற வழிபாட்டை முன்னிட்டு முன்னதாக கோயிலில் உள்ள
பஞ்சமுக ஆஞ்சநேயர் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது
அதனை தொடர்ந்து விஸ்வருப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும்
நடந்தது இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள்
கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர் விழாவை முன்னிட்டு அரசு
போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.