02/10/2020 5:31 AM

முதல்வர் கையால் விருது! சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து! இடமாற்றம் ஆன தாசில்தார்!

சற்றுமுன்...

ஒரே நாடு; ஒரே கார்டு: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி!

டென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது

அக்.1: தமிழகத்தில் இன்று… 5688 பேருக்கு கொரோனா உறுதி; 66 பேர் உயிரிழப்பு!

வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு களுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,47,335 ஆக உயர்ந்துள்ளது

ஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம்.

ஆந்திராவில் நாளை மாலை 7 மணிக்கு அனைவரும் கை தட்ட வேண்டும்... அமைச்சர். வேண்டுகோள்.வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கை...

இன்று உலக காபி தினம்.

சோம பானம் - ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.பலருக்கு சோமபானம் காபிதான். இது பல சுவைகளில் நாவிற்கு அமூதூட்டும் பானம்,பாலின் தரத்தினை தன் சுவையினால் வெளிப்படுத்தும் பானம், சுண்டக் காய்ச்சியப் பாலில்...
Screenshot_2020_0819_120335

பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரிடம் விருது வாங்கியதை கொண்டாடுவதற்காக சக ஊழியர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி கொடுத்த பெண் தாசில்தார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பலர் வேலை இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்கள் ஒன்று கூடி தலவாழை பிரியாணி விருந்து படைத்து, அதனை பேஸ்புக்கில் லைவ் செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் தாசில்தார் ஒருவர், சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்

கொரோனா காலத்தில் இப்படி பெண் தாசில்தார் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாசில்தாராக செயல்பட்டு வந்தவர் ஜெயசித்ரா. பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிறப்பு விருது வழங்கினார். இதையடுத்து, சக ஊழியர்களுக்கு விருந்து வைக்க தாசிர்தார் ஜெயசித்ரா முடிவு செய்தார். அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி விருந்துக்கான ஏற்பாடு நடந்துள்ளது. இந்த விருந்துக்கு பின்னதாக ஜெயசித்ராவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றி வரும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் தலவாழை இலையுடன் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Screenshot_2020_0819_120108

இந்த பிரியாணி விருந்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது, கொரோனா காலத்தில் விதிகளை மீறி பிரியாணி விருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தார் ஜெயசித்ராவை பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி ஒருவர், அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

சமையல் புதிது.. :

சினிமா...

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ் எஸ்டிஜி ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் விருது அறிவித்துள்ளது.கொரோனா...

என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

என்னுடைய திட்டம் இதுதான்... அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட்.தன் உதவி செயல்கள்,...

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

ஹீரோவாக சோனு சூட்... கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளார்.அப்படிப்பட்ட சோனு சூட்டை...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »