பாவூர்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி
நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது,
நெல்லை மேற்கு, கிழக்கு மற்றும் மாநகர சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில
துணைப்பொதுச்செயலாளர் என்.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் நெல்லை
மேற்கு டி.ஆர்;.தங்கராஜ், கிழக்கு செங்குளம் கணேசன், மாநகர் சேவியர் முன்னிலை
வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை வரவேற்றார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட துணை பொதுச்செயலாளர்
சேவியர், மாநில இளைஞரணி இணைச்செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, தென்காசி புறவழிச்சாலை
பணி மற்றும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலைப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.
ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும். வறட்சியால்
பாதிக்கப்பட்டுள்ள பனை, தென்னை, வாழை மரங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்கிட
வேண்டும். பீடித்தொழிலாளர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை முழுமையாக
குறைத்திட வேண்டும். தனது எம்.பி., எம்.எல்.ஏ. ஓய்வூதியம் வேண்டாம் என
அறிவித்த கட்சித்தலைவர் சரத்குமாருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.ராமராஜா நன்றி கூறினார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari