― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விநாயக சதுர்த்தி: நீதிமன்ற உத்தரவை அவமதித்து ‘எடப்பாடி’ போலீஸ் அடாவடி!

விநாயக சதுர்த்தி: நீதிமன்ற உத்தரவை அவமதித்து ‘எடப்பாடி’ போலீஸ் அடாவடி!

- Advertisement -
senkottai police vinayaka idol

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு வழக்கம்போல் எடப்பாடி போலீஸ் ஹிந்து  பண்டிகையின் மகத்துவத்தை குலைக்கும் வகையில் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. 

நாடெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தமிழகத்தில் மட்டும் பல்வேறு இடையூறுகளை தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற நாத்திக திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த நான்கைந்து வருடங்களாக ஆளும் அதிமுக அரசும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உள்நோக்கம் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அளித்த பதிலில் தெளிவாக தெரிந்தது தற்போது நோய் தொற்று காலம் என்பதால் ஊர்வலங்கள். மக்கள் கூடுதல் இவற்றுக்கு தடை உள்ளது அதை விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தும் இந்து அமைப்பினர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு அதன்படி தாங்கள் எளிமையாக நடத்த போவதாக அறிவித்திருந்தனர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் தொற்று பரவும் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு பதிலாக சதுர்த்தி ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறுவதன் மூலம் அரசுத் தரப்பின் உள்நோக்கம் தெரிகிறது என்கின்றனர் இந்து அமைப்பினர். 

senkottai police vinayaka idol1

தொற்று பரவல் காரணமாக, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ள போதிலும், வீடுகளின் முன் சிலைகளை வைக்கவும், வீட்டு பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைக்கவும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஒருவர் மட்டுமே எடுத்துச் சென்று கரைக்கலாம், கூட்டமாக செல்லக் கூடாது, கொடி கட்டி அமைப்பு ரீதியாக வழிபாடு கூடாது என்று கட்டுப்பாடு  விதித்தது. அதனை இந்து அமைப்பினர் ஏற்றுக்கொண்டு, தாங்களும் அவ்வாறு கோரியதாகவே தெரிவித்தனர். 

சாதாரண அளவில் சிலைகள் வைப்பதற்கும், கூட்டம் சேராமல் தனிநபர் இடைவெளியுடன் வழிபாட்டை அனுமதித்து, அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத ரீதியான மரபை மாற்றக் கூடாது என்றும் ஹிந்து அமைப்புகளும், பொது மக்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.  

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இல.கணபதி, சிவசேனா தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட அனுமதிக்கலாம். முற்றிலும் விழாவையே தடை செய்யும் அரசின் உத்தரவை ரத்து செய்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது. 

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்த போது, இந்து முன்னணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், நாங்கள் ஊர்வலம் நடத்தப் போவதில்லை. பல ஆண்டுகளாக பின்பற்றும் மத நிகழ்வுகளை நடத்த, தனி நபர்களை அனுமதிக்க வேண்டும். வீடுகள், கோவில்கள் முன் சிலைகளை வைக்கவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். எங்கள் அமைப்பு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானபோது, தனி நபர் வழிபாடுகளுக்கு தடை இல்லை. ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம். தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்று கூறினார். 

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட  நீதிபதிகள், தாங்கள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் விரிவான நிவாரணம் கோரப்பட்டிருந்தாலும், பெரிய அளவில் ஊர்வலங்கள், சிலைகள் கரைப்புக்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தவில்லை. மதச் சடங்குகளை, தனி நபர்கள் நிறைவேற்ற அனுமதிக்கும்படி கோரியுள்ளனர். 

senkottai police vinayaka idol2

தற்போது, ஊரடங்கு நிபந்தனைகளில் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது. வீடுகள், கோவில்கள் முன் சிலைகளை வைத்து, நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று தனி நபர்கள் கரைப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னையோ, நோய் தொற்று சூழ்நிலையோ ஏற்படாது. தனி நபர்கள்தான் சிலைகளை கரைக்கச் செல்கின்றனர்; எந்த அமைப்பும் அல்ல. குறிப்பிட்ட இடத்தில், மக்கள் பெருமளவு கூடுவதாலும், அங்கே தங்குவதாலும், நோய்த் தொற்று பரவல் ஏற்படும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலை இங்கே இல்லை. சிலைகளை கரைக்க கூட்டமாக அனுமதிக்கப்படுவது இல்லை.

webcopy court order

தனி நபர்கள், குடும்பத்தினர் நீர்நிலைகளுக்குச் சென்று கரைத்த பின் திரும்பி விடுவர்.மேலும், கால வரம்பு, சமூக இடைவெளி நிபந்தனைகளும் உள்ளன. தயாரிக்கப்பட்ட சிலைகள், சதுர்த்தி பண்டிகையின் போது மட்டுமே பயன்படுத்தப்படும். களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீண்ட காலம் இருக்காது. சிலைகளை தயாரித்தவர்களுக்கும் இழப்பு ஏற்படும். அவர்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

எனவே, வீடுகள் முன் சிலைகளை வைக்கவும், கோவில் நுழைவுவாயிலில் வைக்கவும், தனி நபர்களை அனுமதிக்க வேண்டும்.

சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்கு தனி நபர்களை அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி, கால வரம்பு பின்பற்றப்படப் வேண்டும். இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே; அமைப்புகள் எவற்றுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. 

சென்னை, சாந்தோம் பகுதியில் இருந்து, நேப்பியர் பாலம் வரை, கடற்கரையில் சிலைகளை கரைக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டினர்.

vinayaka store sealed விநாயகர் சிலைகள் தயாரிக்கும் இடங்களுக்கே சென்று சீல் வைத்த போலீஸார்

இருப்பினும் நேற்றும் இன்றும் போலீசார் வழக்கம்போல் நீதிமன்ற உத்தரவை தவறாகவே புரிந்து கொண்டு சிலைகள் தயாரிக்கும் இடங்களுக்கே சென்று அவற்றை சீல் வைப்பதும் சிலைகள் விற்பனை தடுப்பதும் மிரட்டுவதும் நடவடிக்கைகளில் இறங்கி இருந்தனர் மேலும் விநாயகர் சிலை சென்ற வருடம் வைத்து வழிபாடு செய்து இருந்த இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு சென்று மிரட்டுவதும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளை வைத்து விரட்டுவதாக இருக்கிறார் 

இன்று காலை தங்கள் வீட்டு வாசல்களில் அமைப்பு ரீதியாக இல்லாமல் தாங்களும் ஒரு தனி நபராக இருந்து இரண்டரை அடி முதல் 3 அடி உயரத்துக்கு உள்ள சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு கூட அனுமதிக்காமல் அவற்றை எடுத்துச் சென்ற காட்சிகளும் அரங்கேறின 

senkottai police vinayaka idol3

ஹிந்து அமைப்பில் இருந்தாலும் கூட அவர்களும் தனிநபர்களை என்ற எண்ணம் இல்லாமல் போலீசார் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகர இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டு வாசலில் விநாயகர் சிலையை வைத்து வழிபட போலீசார் அனுமதிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடியும் தோரணமும் அமைப்பின் பெயரும் தெரியாமல் தனிநபராக தன் வீட்டு வாசலில் வாசலில் வைத்திருந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்து அதை எடுத்துச் சென்றனர் அப்போது அதை எதிர்த்து அவர் தனிநபராக கோஷம் இட்டுள்ளார்

தாம் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும் பூஜை செய்யவும் சில நாட்களுக்கு முன் கையில் காப்பு கட்டி விரதம் இருந்ததாக கூறுகிறார் முருகன்.  உள்ளூர் தலையாரி மூலம் அவருக்கு நெருக்குதல் கொடுத்ததாகவும், சிலை வைத்து வழிபடக் கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிடுகிறார் முருகன். 

காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கூறுகின்றனர் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள். டிஜிபி இந்த உத்தரவு குறித்து தெளிவாக போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பதுதான் போலீஸாரின் கடமை. ஆனால் போலீஸாரின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளே மக்கள் மனத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி,  மேலும் மேலும் பிரச்னைகளை வளர்க்கக் கூடும்!

dindukkal thadikombu

காவல் துறையின் அராஜகம்:
பெரும்பான்மை இந்து மக்களின் முதல் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் சிலைகளை உடைத்து ஈ.வே.ரா., போலவே திண்டுக்கல் தாடிக்கொம்பு காவலர்கள் செய்துள்ளனர்.
பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் ஓட்டு முக்கியம், வரிப்பணம் முக்கியம், ஆனால் இந்துக்களின் கலாச்சாரமும் இந்துகடவுளும் அரசாங்கத்திற்கும் , அதிகாரிகளுக்கும் முக்கியமில்லை என்பதைப் போலவே செய்துள்ள தாடிக்கொம்பு காவலர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது..‌.
– சமூக வலைதளங்களில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version