Home ஃபோட்டூன் கார்பனில் சுற்றப்பட்ட தங்க ஷீட்கள்! 78.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

கார்பனில் சுற்றப்பட்ட தங்க ஷீட்கள்! 78.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

gold-sheets

உளவுத் தகவலின் அடிப்படையில், ஒரு பயணிக்கு வந்த பார்சல் பரிசோதித்து பார்க்கப்பட்டதில், சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள், 1.04 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.45 கிலோ தங்க தாள்களை பறிமுதல் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட பயணி முன்னதாகவே துபாயில் இருந்து சென்னை வந்திருந்தார். அவரது உடமைகள் தனியாக, துபாயிலிருந்து அனுப்பபட்டன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமானம் வழியாக அனுப்பபப்பட்ட நான்கு அட்டைப்பெட்டிகள், தனியாக அவருக்கு unaccompanied baggage ஆக அனுப்பப்பட்டிருந்தது.

அட்டைப்பெட்டியில் பொம்மைகளும் படுக்கை விரிப்புகளும் மற்ற வேறு சில பொருட்களும் இருப்பதாக் கூறப்பட்டது.

ஆனால், பெட்டிகள் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததாக கூறப்பட்டது.

அட்டைத் தாளைக் கிழித்தபோது, ​​கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட தங்க ஷூட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அட்டையின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் மறைத்து தங்க ஷீட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“இது போன்று தனியாக பயணிகளுக்கு வரும் சாமன்களில் இருந்து தங்கத் ஷீட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும், இது முன்னர் பயணிகளுடன் வரும் சாமான்களில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பார்த்தோம். ஆனால் புதுமையான வழியில் கடத்தல் நடைபெற்றுள்ளது. தங்க ஷீட்கள் கார்பனால் சுற்றப்பட்டிருந்ததால், அதனை கண்டறிவது கடினம். குறிப்பிட்ட உளவுத் தகவல் காரணமாகத் தான் இதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது”என்று சுங்க துறை ஆணையர் ராஜன் சவுத்ரி கூறினார்.

அட்டைப்பெட்டி பெட்டிகளில் இருந்து மொத்தம் 3 படுக்கை விரிப்புகள் மற்றும் 7 பொம்மை பெட்டிகள் இருந்தன. இவற்றில் ரூ .78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ எடையுள்ள 10 தங்க ஷீட்கள் 1962 சுங்கச் சட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பயணி தமிழ்நாட்டின் கள்ளக்குரிச்சியைச் சேர்ந்தவர், துபாயில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். கோவிட் -19 பரவலைத் தொடர்ந்து வேலையை இழந்த பின்னர் அவர் சமீபத்தில் தாயகம் திரும்பினார். அவரை இப்போது அதிகாரிகள் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version