தனியார் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

fire-acc

தெலுங்கானாவில் தனியார் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தால் அப்பகுதியே தீக்குழம்பாக காட்சியளித்தது. அதாவது தெலுங்கானா மாநிலம் மல்கஜகிரி மாவட்டத்தில் விமானப்படை தளம் அருகே ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்தால் ஆலையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதனைத்தொடர்ந்து வானுயரத்திற்கு புகைமூட்டத்துடன் தீ எரிந்ததால் சுற்று வட்டார மக்கள் பீதியடைந்தனர்.

இதனையடுத்து நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள தனியார் ரசாயன ஆலையிலும் நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது சுற்றுவட்டாரத்தில் சாலைகள், வீதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற மக்கள், நச்சு புகையால் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,099FansLike
379FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,868FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version