Homeசற்றுமுன்நெஞ்சுவலி.. பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதி! லைஃப் இஸ் வெரி ஷார்ட்.. வனிதா ட்விட்!

நெஞ்சுவலி.. பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதி! லைஃப் இஸ் வெரி ஷார்ட்.. வனிதா ட்விட்!

vanitha vijayakumar peter paul

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீட்டர் பால் நிச்சயம் குணமாகி வீடு திரும்புவார் என வனிதா விஜயகுமார் வரிசையாக ட்வீட் போட்டுள்ளார்

வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக பீட்டர் பால் எனும் விஷுவல் எடிட்டரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் அந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சைகளை வெடிக்கச் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முறையாக விவாகரத்து செய்யாமல், தன்னை பீட்டர் பால் ஏமாற்றி விட்டார் என எலிசபெத் ஹெலன், புகார் அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி சங்கர் உள்ளிட்ட நடிகைகள் சப்போர்ட் செய்தனர்.

Vanitha

அதன் விளைவாக வனிதா விஜயகுமாருக்கும், அவர்களுக்கும் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய மோதல்கள் வெடித்தன.

டாக் ஆஃப் தி டவுனாக வனிதா விஜயகுமாரின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், மாற்றி மாற்றி ஒரு கோடி கொடு, 2 கோடி கொடு என தொடுத்த வழக்குகள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியாமல், அடுத்த சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் தலையெடுக்க, நடிகை வனிதாவின் பரபரப்பு அப்படியே அடங்கி போனது.

மது போதைக்கு அடிமையான பீட்டர் பால், மறுவாழ்வு மையத்தில் எல்லாம் சிகிச்சை பெற்று மீண்டவர். இந்நிலையில், வனிதா விஜயகுமாரை கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அவருடன் யூடியூப் பேட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு, வனிதா மீது தான் வைத்திருக்கும் காதலை உறுதிப்படுத்தி வந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவர் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக உடைந்து போயுள்ளார் வனிதா. தொடர்ந்து தனது நிலை குறித்து ட்வீட்களாக பதிவிட்டு, ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

நேற்றைய தினத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றும், கடவுள் தங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார் என்றும், நிச்சயம் மிராக்கல் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதலின் வலிமை எங்களை கை விடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம் என்றுள்ளார்

திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம் என ட்விட்டர் பக்கத்தில் ஒரே அடியாக புலம்பி தள்ளி வருகிறார்.

மேலும், தனது கணவர் பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள் வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டவள் என்றும், லைஃப் இஸ் வெரி ஷார்ட் என்றும் மிகவும் உருக்கமாக பல பதிவுகளை வனிதா பதிவிட, அவருக்கு ஆதரவாகவும், சபித்தும் பல கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,847FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...