ஏப்ரல் 14, 2021, 6:48 மணி புதன்கிழமை
More

  மதுரையில் பூட்டியிருந்த விடுதிக்குள் பாலியல் தொழில்! மூவர் கைது!

  madhurai

  மதுரையில் ஊரடங்கு காரணமாக தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், சில விடுதிகளில் தவறான செயல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்நிலையில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த காவலர் திருப்பதி என்பவருக்கு மதுரை காக்கா தோப்பு ஸ்டார் டவர் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

  அவர் அளித்த தகவலின் பேரில் திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் அங்கு சென்ற தனிப்படையினர், சம்பந்தப்பட்ட விடுதியை ஆய்வு செய்த போது அறை எண் 303 மற்றும் 306-ல் 3 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

  madhurai-1

  இதைத்தொடர்ந்து அந்த மூன்று பெண்களை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்

  பெண்களை அத்தொழிலுக்கு அழைத்து வந்த விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த முகமது ரிஸ்வான், மதுரை தசரதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

  பாலியல் தொழில் நடைபெறுகிறது என தெரிந்து அதற்கு அனுமதி அளித்த தங்கும் விடுதியின் உரிமையாளர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »