spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணமானது மனம்: ஆச்சாரியாள் அருளமுதம்!

பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணமானது மனம்: ஆச்சாரியாள் அருளமுதம்!

- Advertisement -
abinav vidhya theerthar

மூன்று வயதுடைய ஒரு பையன் தன் தாயிடம் ஆப்பிள் வேண்டும் என்று கேட்டான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் ஆப்பிளுக்கு பதிலாக மற்ற பழங்களை கொடுத்தாள்.

ஆனால் அவற்றை வாங்க மறுத்த குழந்தை தனக்கு ஆப்பிள் தான் வேண்டும் என அடம் பிடித்தான். தான் மாலையில் அவனுக்கு ஆப்பிள் வாங்கி தருவதாக கூறியும் அவன் சமாதானமாகமல் அழத் தொடங்கினான். வேறு வழியின்றி அவள் தனித்து சென்று அதை வாங்கி கொடுத்தாள். பிறகு தான் குழந்தை சந்தோசமாக இருந்தான்.

இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த 7 வயது நிரம்பிய அச்சிறுவனின் சகோதரி அவனை சீண்ட நினைத்தாள். மிகவும் அக்கறையுடன் அவனைப் பார்த்து ஆப்பிள் பழத்தில் இருந்து ஒரு விதையை உனக்கே தெரியாமல் சாப்பிட்டு விட்டாய். நீ சாப்பிட்டதை நான் பார்த்தேன். அப்படி செய்ததால் என்ன நடக்கும் தெரியுமா? உன் வயற்றில் ஒரு ஆப்பிள் மரம் வளரும். அம்மரம் ஒரு பெரிய கஷ்டத்தை உனக்கு கொடுக்கும். அதன் கிளைகள் உன்னுடைய மூக்கிலும் வாயிலும் நீட்டிக்கொண்டு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். என்று அவள் கூறியதை அப்படியே உண்மை என நம்பியதால் அவன் முகம் பயத்தில் உறைந்தது. அவனுடைய கலக்கத்திற்கான காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்ட தாய் தன்னால் இயன்ற அளவு அக்குழந்தையை சமாதானப்படுத்தினாள். அவளுடைய அக்கா வேண்டுமென்றே அவனை சீண்டி பார்ப்பதற்காக அவ்வாறு கூறினாள் என்றும் உண்மையில் மரம் வயிற்றில் வளராது என்பதை அவனுக்கு எடுத்துக் கூறியும் அவன் மனம் ஏற்கவில்லை.

அச்சத்தால் சிறுவன் மணிக்கணக்கில் சொட்டு நீரைக்கூட பருகாமல் பிரம்மித்துப் போய் நின்றான். குழந்தை நிலையை பார்த்து தாய் மிகவும் கவலையுற்றாள். அலுவலகத்திலிருந்து கணவன் வீடு திரும்பியதும் முதல் வேலையாக நடந்தவற்றை கூறினாள்.

தன் மகனை கைகளில் தூக்கி கொண்டு நம்பிக்கையூட்டும் குரலில் மிகவும் இதமாக ஆப்பிள் பழத்தை விழுங்கியதால் சாதாரணமாக எந்த மரமும் வயிற்றுக்குள் வளராது. அப்படியே ஒரு மரம் வளர்த்தாலும் அது பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். உண்மையில் எந்த வலியும் உனக்குநோக்கி ஏற்படாது. உருவத்தில் சிறியதாக உள்ளதால் அதனை எவராலும் பார்க்க முடியாது. ஆகையால் உனக்குள்ளே ஆப்பிள் மரம் உருவானாலும் அதனால் உனக்கு கஷ்டம் இல்லை. யாரும் உன்னை கேலி செய்ய மாட்டார்கள். மரம் வளர்ந்து விட்டால் உனக்கு ஆப்பிள் பழங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். எப்பொழுதெல்லாம் உனக்கு ஆப்பிள் பழம் சாப்பிட ஆசை வருகிறதோ அப்பொழுதெல்லாம் நீயும் உன் கை விரல்களை உள்ளே விட்டு பழத்தைப் பறித்து சாப்பிட்டு மகிழலாம். இப்படி நல்ல ருசியான பழங்களை கொடுக்க வல்ல அபூர்வமான அந்த மரம் வளர்த்தால் நீ சந்தோஷப்பட வேண்டும். என்று கூறினார். அச்சிறுவன் மெதுவாக தலையை அசைத்து சிரிக்க ஆரம்பித்தான்.

தந்தை அந்த மரத்தை வளர்க்க வேண்டும் என்று உனக்கு விருப்பம் உள்ளதா இல்லையா என்று கேட்டார் நிச்சயமாக எனக்கு மரம் வேண்டும் என்று பதிலளித்தான். அந்த விதை முளைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. ஒருவேளை முளைத்து விட்டால் அது நன்கு வளர்வதற்காக நீர் நிறைய வேண்டும். அதற்கு நீ நிறைய உணவை உட்கொள்ள வேண்டும். நிறைய நீரை குடிக்கவேண்டும் .ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் அந்த மரம் வளராமல் இறந்து விடும் என கூறியவுடன் பையன் தாயிடம் ஓடிச்சென்று தன் உணவையும் தண்ணீரையும் கொடுக்குமாறு கேட்டான் அவனுடைய பயம் போன இடம் தெரியவில்லை. மிகுந்த உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் அவன் இருந்தான்.

ஆப்பிள் பழத்தை சாப்பிட வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாத காரணத்தால் முதலில் துயரத்தில் இருந்த அவன் உடல் மீது வைத்திருக்கும் அபிமானத்தால் தன் உடம்பில் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று மூடத்தனமாக கற்பனை செய்து அதன் விளைவாக அச்சத்திற்கு ஆளானான். ஆகையால் ஆப்பிள் அவன் கைக்கு கிடைக்காத போதும் கிடைத்தபோதும் அவனுடைய துன்பத்திற்கு காரணமாக இருந்தது அவனுடைய மனமே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe