நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார். சுமார், 9.40 மணியளவில் துலாக்கட்டம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், அங்கிருந்த அர்ச்சகர்கள் வழிபாடு நடத்தினர். காவிரி நீரில், மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் காவிரி நீரில் மூழ்கி புனித நீராடினர். முதலமைச்சர் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கர விழா மலரை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari