ஏப்ரல் 21, 2021, 8:11 மணி புதன்கிழமை
More

  தூம் 2 படத்தால் ஈர்ப்பு! போலீசாகவும் இருந்து கொள்ளையனுக்கும் உதவி!

  dhoom

  காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 படத்தால் ஈர்க்கப்பட்டு, ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.

  கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய இந்திய திரைப்படம் ஆகிய தூம் 2 எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள கிருத்திக் ரோஷன் திருடன் மற்றும் மாறுவேட கொள்ளைகளில் ஈடுபட்டு ஹீரோவாக நடித்து இருப்பார்.

  இந்நிலையில் இந்த படத்தை பார்த்த காசியாபாத்தை சேர்ந்த ரகு கோஸ்லா என்பவர் அவரைப்போலவே தற்பொழுது ரயில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் இவர் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச கான்ஸ்டபிள் 30 வயது ஸ்ரீகாந்த் என்பவரும் துப்பாக்கி முனையில் இவருடன் சேர்ந்து பல கார்களை கொள்ளையடித்துள்ளது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

  அண்மையில் கூட ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஐந்தரை மணியளவில் ஹூண்டாய் க்ரெட்டாவில் அமர்ந்து இருந்த ஒருவரது மொபைல் போன், கார் மற்றும் பணம் ஆகியவற்றை மூன்று நபர்கள் சேர்ந்து கொள்ளை அடித்துள்ளனர்.

  dhoom-2

  அதன் பிறகு பதிவு பாதிக்கப்பட்டவர் செய்த வழக்கை விசாரித்த போது ரகு மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும்தான் இந்த வேலையை செய்வதாகவும் முதலில் ஸ்ரீகாந்த் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி ஒளித்து வைத்துவிட்டு போலீஸ் ஸ்ரீகாந்த் தன்னுடைய போலீஸ் சீருடை அணிந்து கொண்டு பாதுகாப்பான மறைவிடத்தை கோஸ்லா அடைவதற்கு உதவியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் இவர்கள் இருவரும் தூம் 2 எனும் ஹிருத்திக் ரோஷனின் படத்திலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் எவ்வாறு தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பாரோ அதுபோல கோஸ்லேவும் தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே கொள்ளை அடிக்கும் பழக்கம் உடையவராக வலம் வந்துள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »