முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் ரூ. 60 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது
மேலும், மூன்றாவது நாளாக தொடந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.
விவரம்…
ரூ.60 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது அம்பலம்
3 கோடி நகைகள் பறிமுதல்
20 வங்கி கணக்குகளும் முடக்கம் என தெரியவந்துள்ளது.
மேலும் 1.20 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரூர் மாவட்ட தினகரன் அணி அதிமுக துணை செயலாளராக இருக்கும் சரவணன் என்பவர் நிதி நிறுவனத்தில் செய்யப்பட்ட சோதனையின் முடிவில், அவருடைய நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், செந்தில் பாலாஜியின் நண்பரான சாமிநாதன் மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட பலரது வீட்டில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது .
மேலும் இதற்கு அடுத்தபடியாக செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது …
இந்நிலையில், இன்று சோதனை முடிவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.