பிப்ரவரி 24, 2021, 11:17 மணி புதன்கிழமை
More

  உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!

  Home சற்றுமுன் உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!

  உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!

  gun

  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரயில்வே உயர் அதிகாரி ஒருவரின் 16 வயது மகள் , தனது தாயாரையும், அண்ணனையும் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அந்த அதிகாரி தில்லியில் வேலை பார்த்து வரும் நிலையில், குடும்பத்தினர் லக்னோவில் வசித்து வந்தனர். அவரது மனைவியும், மகனும், மகளும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று பிற்பகல் அவரது 16 வயது மகள்,வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது அம்மாவையும், அண்ணனையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

  பிறகு தனது கையை ரேசரால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அந்த சிறுமியை கைது செய்துள்ளனர். தாயையும், சகோதரனையும் சுட்டுக்கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

  அவருக்கு மன அழுத்தம் இருந்ததாக தெரிவித்த போலீசார், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
  அந்த சிறுமி துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari