பிப்ரவரி 24, 2021, 11:34 மணி புதன்கிழமை
More

  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

  Home சற்றுமுன் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் காலமானார்!

  07 Sep05 Pranab Mukherjee
  07 Sep05 Pranab Mukherjee

  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் காலமானார்!

  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய அரசியலில் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31)  இன்று காலமானார். அவருக்கு வயது 84. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.

  இந்திய அரசியலின்  மூத்த தலைவராகத் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி அண்மையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக இராணுவ மருத்துவ மனைக்குச் சென்றபோது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில், மூளையில் ரத்தம் உறைதலுக்காக அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

   அறுவை சிகிச்சை நடந்து முடிந்த ஓரிரு நாளில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது இந்நிலையில் வென்டிலேட்டர்  உதவியுடன் அவரை சிகிச்சையில் வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் உடல்நிலை நிலையாக உள்ளது என்று ட்வீட் செய்தார். இருப்பினும், அனைவரையும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

  பிரணாப் டாவின் அரசியல் வாழ்க்கை  50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ளது  அவர் இந்திய  நாட்டின் குடியரசு தலைவராக  உயர்ந்த   நிலைக்கு வந்தவர் அவர் 2012 முதல் 2017 வரை   குடியரசு தலைவர் மாளிகையில்   இருந்தார். 

  2009 மற்றும் 2012 க்கு இடையில் அவர் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் (2004-2006), வெளியுறவுத்  அமைச்சராகவும் (2006-2009) இருந்தார். 

  பிரணாப் முகர்ஜிக்கு மூன்று வாரிசுகள். ஷர்மிஸ்தா முகர்ஜி, அபிஜித் முகர்ஜி மற்றும் இந்திரஜித் முகர்ஜி ஆகியோர்.  பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரர். ஆனால் நாட்டின் நலன் என்று வந்தபோது அவர் கட்சி பேதங்களை கடந்து வழிகாட்டி இருக்கிறார் மத்தியில் காங்கிரஸை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது அவருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்டினார் பிரணாப்முகர்ஜி

  இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாம் பிரதமர் பதவியில் அமர்ந்த பின்னர் அவரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலுக்க