ஏப்ரல் 21, 2021, 3:32 மணி புதன்கிழமை
More

  சென்னிமலை முருகன் கோயிலில்… பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

  5 மாதங்களுக்குப் பிறகு சென்னிமலை முருகன் கோவில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்காக திறப்பு..!

  sennimalai murugan
  sennimalai murugan

  5 மாதங்களுக்குப் பிறகு சென்னிமலை முருகன் கோவில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்காக திறப்பு..!

  கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச்-24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது.

  இந்த நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு 1-9-2020 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என்றும், அதேசமயம் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என 30-8-2020 அன்று தமிழக அரசு அறிவித்தது.

  சென்னிமலை முருகன் கோவில்…

  அதன்படி 1-9-2020 – செவ்வாய்க்கிழமை முதல் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலும் 5 மாதங்களுக்குப் பிறகு பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.

  அரசு அறிவிப்பின்படி 1-9-2020 முதல் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பூமாலை, தேங்காய், பழம், பால், தயிர் உள்ளிட்ட எந்த ஒரு பூஜை பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

  அதே சமயம் கோவில் குருக்கள்கள் யாரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

  கோவிலில் வைக்கப்பட்டுள்ள திருநீர் பாக்கெட்டுகளை பக்தர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

  பக்தர்கள் யாரும் கீழே விழுந்து சாமி தரிசனம் செய்யக் கூடாது.

  கோவில் குருக்கள்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

  மலைக்கோயிலுக்கு செல்ல பஸ் வசதி…

  சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கம்போல் பஸ் வசதி உண்டு.

  ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்சில் அமர வேண்டும்.

  10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பஸ் மூலம் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை.

  அதே போல் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மலைக்கோவில் பஸ்சில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  பக்தர்கள் அனைவரும் தங்களை தாங்களே பாதுகாக்கும் வகையில் அரசு உத்தரவை பின்பற்றி சென்னிமலை முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். நன்றி!!

  • கே.சி.கந்தசாமி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »