ஏப்ரல் 19, 2021, 2:02 காலை திங்கட்கிழமை
More

  ஆம்புலன்சில் பெண் ஓட்டுனர்: 90 ஆம்புலன்ஸ்கள்.. கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

  cm-4

  நாட்டிலேயே முதன் முறையாக, ஆம்புலன்ஸ் வண்டி ஓடுனராக ஒரு பெண் பணியமர்த்தப்பட்டார். தமிழகத்தில், மாநிலத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர் கே பழனிசாமி புதிய அவசரகால சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  veeralaksmi

  எம்.வீரலட்சுமி என்ற பெண் ஓட்டுனர் புதிதாக தொடங்கப்பட்ட ‘108’ ஆம்புலன்ஸில் ஒன்றின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

  இது நாட்டில் முதல் முறையாக நடந்துள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.

  cm

  உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தொண்ணூறு ஆம்புலன்ஸ்கள் , முகாம்களில் சேகரிக்கப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்வதற்காக 10 அரசு ரத்த வங்கிகளில் பயன்படுத்த 10 உயர் தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் கோவிட் எதிர்ப்பு பணிகளுக்காக ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல் குழு நன்கொடையளித்த 18 ஆம்புலன்ஸ்கள் ஆகியவை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன.

  108 ஆம்புலன்ஸ் அவசர சேவைகளை மேலும் வலுப்படுத்த 500 புதிய ஆம்புலன்ஸ்கள் சுமார் 125 கோடி ரூபாய் செலவில் மாநிலத்திற்கு அர்ப்பணிக்கப்படும் என்று மார்ச் 24 அன்று முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

  cm1

  இதைச் செயல்படுத்த, முதல் கட்டத்தில், 90 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 10 இரத்த சேகரிப்பு வாகனங்கள் முறையே 20.65 கோடி ரூபாய் மற்றும் 3.09 கோடி ரூபாய் செலவில் பெறப்பட்டுள்ளன.

  cm2

  பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் 138 பேருக்கு நியமனம் உத்தரவுகளை விநியோகிப்பதைக் குறிக்கும் வகையில் முதல்வர் அவர்களில் ஏழு பேருக்கு உத்தரவுகளை வழங்கினார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »