பிப்ரவரி 24, 2021, 10:52 மணி புதன்கிழமை
More

  கோயில் திறந்தும் நீராட முடியவில்லையே! பக்தர்கள் ஏக்கம்!

  Home சற்றுமுன் கோயில் திறந்தும் நீராட முடியவில்லையே! பக்தர்கள் ஏக்கம்!

  கோயில் திறந்தும் நீராட முடியவில்லையே! பக்தர்கள் ஏக்கம்!

  அழகர்கோயில் திறக்கப்பட்டும், மலைமீதுள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் மலைமேல் நீராடி,

  azhagar-perumal2
  azhagar-perumal2

  மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோயில் திறக்கப்பட்டும், மலைமீதுள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் மலைமேல் நீராடி, புனித நீரை கொண்டு செல்ல வழியில்லாமல் ஏமாற்றத்துடன் செல்வதைக் காண முடிந்தது.

  nupura-gangai
  nupura-gangai

  அழகர் கோயிலானது வைணவத் தலங்களில் மிகவும் பாடல் பெற்ற கோயிலாகும். மதுரை மாவட்டத்திலும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் தொடங்குவதற்கு முன்பு, இப் பகுதியில் உள்ள பூசாரிகள், சாமியாடிகள் அனைவரும், அழகர் கோயிலுக்கு சென்று மலைமேல் உள்ள நூபுர கங்கையில் நீராடி, தாங்கள் கைகளில் கொண்டு செல்லும் பெரிய கேன்களில் புனித நீரை எடுத்துக் கொண்டு, ராக்காயம்மன், சுந்தர்ராஜ பெருமாள், தாயார், மற்றும் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண சாமியை வழிபட்டு வந்து கோயில்களில் அந்த புனித நீரை தெளித்து பின்னர் விழாக்களை நடத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.

  கடந்த 5 மாதங்களாக கோயில்