ஏப்ரல் 21, 2021, 7:05 மணி புதன்கிழமை
More

  மாடியில் இருந்து குழந்தையுடன் விழுந்து … பெண் ‘மர்ம மரணம்’… சோதனையில் கொரோனா!

  ஒன்பது மாத பச்சைக் குழந்தையை அப்பார்ட்மெண்ட் மேலிருந்து கீழே தூக்கி எறிந்து அதன்பின் தாய் மனோக்யாவும்

  corona-test-mother-and-child1
  corona-test-mother-and-child1

  மாடில் இருந்து குழந்தையுடன் விழுந்த மர்மமான முறையில் உயிரிழந்த மனோக்ஞாவின் உடலை கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதில் கொரோனா பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாக தெரிவித்தனர்.

  குண்டூரு லட்சுமிபுரத்தில் தாய் மகள் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது மாத பச்சைக் குழந்தையை அப்பார்ட்மெண்ட் மேலிருந்து கீழே தூக்கி எறிந்து அதன்பின் தாய் மனோக்யாவும் கூட மேலிருந்து கீழே குதித்து உயிரை விட்டார் .

  ஆனால் இதன் மீது பல சந்தேகங்கள் பிறந்துள்ளன. ஞாயிறன்று காலை மனோக்ஞாவின் இறந்த உடலை டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதன் ரிசல்ட் பாசிட்டிவாக வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  corona-test-mother-and-child
  corona-test-mother-and-child

  இந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி மனோக்யாவின் கணவர் மற்றும் மாமியார் மாமனாரை போலீஸார் காவலில் எடுத்து கொண்டார்கள். அவர்கள் மீது செக்சன் 306, 498 ஏ வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இறந்த மனோக்யாவின் கணவர் மாமியார் மாமனார் ஆகியோர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

  மனோக்யாவின் பெற்றோர் உறவினர்கள் மட்டும் மனோக்யாவையும் குழந்தையையும் கொன்றுவிட்டு மேலிருந்து கீழே தூக்கி எறிந்ததாக கூறுகிறார்கள். சம்பவ இடத்தில் தற்கொலைக்கான அடையாளங்கள் இல்லை என்று மனோக்யாவின் தம்பி கார்த்திக் பலமாக வாதாடுகிறார்.

  பட்டாபிராம் சிஐ சத்தியநாராயணா கூறுவது: 29 வது மனோக்யா ஹைதராபாதில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிகிறார். கணவர் கல்யாண்சந்திரா மரைன் இஞ்சினியராக உள்ளார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. லாக்டௌனில் குண்டூர் வந்து கல்யாண்சந்திராவின் பெற்றோருடன் சில மாதங்களாக கமலேஷ் கிராண்ட் அபார்மென்டில் வசித்து வருகிறார்கள்.

  சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஒன்பது மாத குழந்தை துளசியோடு ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தை துளசி உடனே இறந்துவிட்டது. மனோக்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்தேகத்திற்கிடமான மரணமாக பிரிவு 174ன்கீழ் முதலில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

  ஆனால் மனோக்யாவின் பெற்றோர் ரமேஷ்பாபுவும் விஜயலட்சுமியும் தம் மகள் இதற்கு முன்பே ஒருமுறை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துவதாக தமக்கு போன்செய்து அழுததாகத் தெரிவித்தனர். பெரியவர்கள் முன்னிலையில் பேசி சமாதானப் படுத்தியதாகக் கூறினர்.

  போலீசார் முழு விசாரணை செய்ய வேண்டும் என்று இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »