பிப்ரவரி 24, 2021, 11:26 மணி புதன்கிழமை
More

  மாணவர் எதிர்காலம் கருதி கட்டணங்களில் சலுகைகள் வேண்டும்!

  Home சற்றுமுன் மாணவர் எதிர்காலம் கருதி கட்டணங்களில் சலுகைகள் வேண்டும்!

  மாணவர் எதிர்காலம் கருதி கட்டணங்களில் சலுகைகள் வேண்டும்!

  தொழில்நுட்ப / மருத்துவ கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வரவேண்டும்

  student exam
  student exam

  மாணவர்கள் எதிர்காலம் கருதி கட்டணங்களில் சலுகைகள் தரவேண்டும் இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் சி.பி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்!

  கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. மாணவர்கள் சார்பில் இந்து இளைஞர் முன்னணி இதனை வரவேற்கிறது.

  அதே வேளையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காது விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என இந்து இளைஞர் முன்னணி சார்பில் கோருகிறோம்.

  மேலும் கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவுக்கட்டணத்தை எளிய தவணைமுறைகளில் செலுத்த வழிவகை செய்யவேண்டும்.

  கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத மூன்றாமாண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்ப / மருத்துவ கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வரவேண்டும் எனவும் இந்து இளைஞர் முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்… என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Support Us