பிப்ரவரி 24, 2021, 10:51 மணி புதன்கிழமை
More

  ஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

  Home சற்றுமுன் ஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

  ஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

  ஹைதராபாதில் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஓர் உயிர் பலியானது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் செய்த போது

  cesearean
  file picture / representational image

  பிரசவ வலி வேதனையோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் ஜானகி. ஆனால் அவருக்கு நள்ளிரவில் நர்சுகள் சேர்ந்து சிசேரியன் செய்தார்கள். ஆண் குழந்தை பிறந்தது. ஆப்ரேஷன் செய்த பிறகு ஜானகியின் ஆரோக்கியம் நலிவடைந்து சீரியஸ் ஆனது.

  மருத்துவர்கள் சிலரின் அலட்சிய போக்கால் அப்பாவிகளின் உயர் பலியாகி விடுகிறது. சரியான நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் சிலரும், மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் சிலரும் உயிரிழக்கிறார்கள்.

  புதிதாக ஹைதராபாதில் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஓர் உயிர் பலியானது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் செய்த போது அங்கிருந்த நர்ஸ் ஒருவர் பெண் மருத்துரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டு அலட்சியமாக செய்ததால் பிள்ளை பெற்ற உடனே அந்தப் பெண் இறந்து போன சம்பவம் நடந்துள்ளது.

  அதனால் இறந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர். எஸ் ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.

  போலீசார் தெரிவித்த விவரங்களின் படி… ஹைதராபாதில் உள்ள காயத்ரி ஹில்ஸில் உள்ள நவபாரத் நகரைச் சேர்ந்த எம். ஜானகி (23) க்கு இடுப்பு வலி அதிகமானதால் குடும்பத்தினர் இந்த மாதம் 28ஆம் தேதி காலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

  29ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்த ஒரு நர்சும் இதர ஊழியர்களும் சிசேரியன் செய்து ஆண் குழந்தையை வெளியில் எடுத்தார்கள். அதன்பின் ஜானகியின் உடல் நிலை மோசமானது.