Homeஇந்தியாஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

ஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

cesearean
file picture / representational image

பிரசவ வலி வேதனையோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் ஜானகி. ஆனால் அவருக்கு நள்ளிரவில் நர்சுகள் சேர்ந்து சிசேரியன் செய்தார்கள். ஆண் குழந்தை பிறந்தது. ஆப்ரேஷன் செய்த பிறகு ஜானகியின் ஆரோக்கியம் நலிவடைந்து சீரியஸ் ஆனது.

மருத்துவர்கள் சிலரின் அலட்சிய போக்கால் அப்பாவிகளின் உயர் பலியாகி விடுகிறது. சரியான நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் சிலரும், மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் சிலரும் உயிரிழக்கிறார்கள்.

புதிதாக ஹைதராபாதில் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஓர் உயிர் பலியானது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் செய்த போது அங்கிருந்த நர்ஸ் ஒருவர் பெண் மருத்துரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டு அலட்சியமாக செய்ததால் பிள்ளை பெற்ற உடனே அந்தப் பெண் இறந்து போன சம்பவம் நடந்துள்ளது.

அதனால் இறந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர். எஸ் ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.

போலீசார் தெரிவித்த விவரங்களின் படி… ஹைதராபாதில் உள்ள காயத்ரி ஹில்ஸில் உள்ள நவபாரத் நகரைச் சேர்ந்த எம். ஜானகி (23) க்கு இடுப்பு வலி அதிகமானதால் குடும்பத்தினர் இந்த மாதம் 28ஆம் தேதி காலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

29ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்த ஒரு நர்சும் இதர ஊழியர்களும் சிசேரியன் செய்து ஆண் குழந்தையை வெளியில் எடுத்தார்கள். அதன்பின் ஜானகியின் உடல் நிலை மோசமானது.

விடியற்காலை நாலரை மணிக்கு அவரை நிலோஃபர் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அங்கு மருத்துவ சிகிச்சை பெறும்போது ஜானகி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

பிரசவ வலி எடுத்த ஜானகியை நர்சு c-section அறுவை சிகிச்சைக்கு அறிவுரை செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். ஜானகியின் உறவினர்களின் கூற்றுப்படி அந்த நேரத்தில் பெண் மருத்துவரை நர்ஸ் போனில் அழைத்தபோது அந்த பெண் மருத்துவர் நர்சிடம் வீடியோகால் மூலம் எப்படி சிசேரியன் செய்ய வேண்டும் என்று தான் கூறுவதாகவும் அதன்படியே அறுவைசிகிச்சை செய்யும்படியும் கேட்டுக் கொண்டார் என்று கூறுகிறார்கள்… என எஸ் ஆர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் பி மஹேந்நர் ரெட்டி தெரிவித்தார் .

சிசேரியன் ஆபரேஷன் செய்த போது ஒரு நர்ஸ் வேறொரு பெண் மருத்துவரோடு வீடியோ கால் பேசிக்கொண்டே அலட்சியமாக நடந்து கொண்டார் என்று ஜானகி குடும்பத்தார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனால் அறுவைசிகிச்சையில் கோளாறு நேர்ந்து ஜானகி இறந்ததாகக் கூறுகிறார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எஸ் ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். இதன்படி அலட்சியத்தின் கீழ் மருத்துவ ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் கூறினார்.

ஆனால் இது விஷயம் குறித்து அங்குள்ள மருத்துவ அதிகாரிகளை கலந்து பேசுவதற்கு போலீசார் முயற்சித்தபோது யாரும் முன்வரவில்லையாம். இதை அடுத்து அரசு மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,941FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

Latest News : Read Now...

Exit mobile version