ஏப்ரல் 19, 2021, 1:17 காலை திங்கட்கிழமை
More

  மணல் திருட்டில் ஈடுபட்டால்..? காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

  மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது -என்று சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

  sand-mafia
  sand-mafia

  விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர் களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்

  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மணல், மண் மற்றும் கனிம வளங்களை திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 379 மற்றும் சுரங்கங்கள் ,கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

  virudhunagar-sp
  virudhunagar-sp

  மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கைபேசி எண் 9150011000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவித்து அவரின் ரகசியம் காக்கப்படும்

  மேலும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  suguna singh
  suguna singh

  தென்காசி மாவட்டத்தில் மணல் கடந்தலில் ஈடுப்படும் நபர்கள் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனாசிங் எச்சரித்துள்ளார். மேலும் மணல் கடத்தல் குறித்து தனி அலைபேசி எண்: 8610791002 க்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

  முன்னதாக, மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது -என்று சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா திட்டவட்டமாகக் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »