Home உள்ளூர் செய்திகள் கோவை அன்னூர்: தேசிய ஊட்டச்சத்து விழிப்பு உணர்வு கண்காட்சி!

அன்னூர்: தேசிய ஊட்டச்சத்து விழிப்பு உணர்வு கண்காட்சி!

bhoshan-abyan1
bhoshan abyan1

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 2019  ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

bhoshan abyan2

2020 செப்டம்பர் மாதம் தேசிய  ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம்    குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

bhoshan abyan3

இதில் முகக் கவசம் அணிந்து சமூக விலகலுடன்   குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்காட்சியை கண்டனர். ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் ஊட்டப்பட்டது.

bhoshan abyan4

இதற்கான ஏற்பாட்டினை அங்கன்வாடி பணியாளர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் துணை சுகாதார செவிலியர்  செய்திருந்தனர்.

  • செய்தி : சரண், கோவை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version