ஏப்ரல் 21, 2021, 3:46 மணி புதன்கிழமை
More

  பிளாஸ்மா தானம் ஏன் செய்ய வில்லை! மனம் திறந்த இயக்குனர் ராஜமௌலி!

  ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.

  rajamauli
  rajamauli

  இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுளி கொரோனாவின் தாக்குதலுக்கு உட்பட்ட போது அதிலிருந்து தேறி வெளி வந்ததும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார்.

  செவ்வாயன்று அவருடைய சகோதரர் எம்எம் கீரவாணி குடும்பம் பிளாஸ்மா தானம் செய்துள்ளது. ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.

  பிரமுக இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தார். தன் பெரிய மகன் காலபைரவோடு சேர்ந்து ஹைதராபாதில் கிம்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தார்.

  அண்மையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட கீரவாணி குடும்பம் அதன்பின் உடல்நலம் தேறி வெளிவந்தது. பிளாஸ்மா தானம் குறித்த புரிதல் ஏற்படுத்துவதற்காக சைபராபாத் போலீசாரோடு சேர்ந்து அதற்கென்று ஒரு பாடலை இசை அமைத்த கீரவாணி இப்போது தன் மகனோடு சேர்ந்து ப்ளாஸ்மா தானம் செய்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

  அப்படி இருக்கையில் எம்எம் கீரவாணி குடும்பத்தோடு கூட அவருடைய சகோதரர் பிரமுக திரைப்பட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌளி கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானார். உண்மையில் கீரவாணி குடும்பத்தை விட முன்பே ராஜமௌலி இந்த விஷயம் குறித்து வெளி உலகத்திற்கு தெரிவித்தார்.

  விரைவிலேயே நான் உடல்நலம் தேறிய பின் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார். நோய்த் தொற்றிலிருந்து உடல் நலம் தேறிய பின்பு கூட மருத்துவரின் அறிவுரைப்படி ப்ளாஸ்மா தானம் செய்வேன் என்று தெளிவுபடுத்தினார்.

  ஆனால் இப்போது தானம் செய்யும் நிலையில் இல்லை. அதன் காரணத்தைக் கூட அவரே தெரிவித்தார்.

  பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றால் தானம் கொடுப்பவரின் ரத்தத்தில் இம்முநோகுளோபுலின் (igG) ஆன்டிபாடீஸ் 15 பாயிண்ட்களை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது ராஜ்மௌளி இரத்தத்தில் ஐஜிஜி லெவெல் 8 புள்ளி 62 ஆக உள்ளது. அதனால்தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என்று ராஜமவுலி மருத்துவர் மூலம் தெரிவித்துள்ளார்.

  தன் பெரிய அண்ணா கீரவாணியும் காலபைரவாவும் செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தனர் என்று அவர் கூறினார். உடலில் வளர்ச்சி அடையும் ஆன்டிபாடிஸ் சிறிது காலம் உடலில் இருக்கும் என்று ராஜமௌலி சென்னார்.

  கொரோனாவிலிலிருந்து உடல்நலம் தேறி வரும் ஒவ்வொருவரும் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன்வர வேண்டுமென்றும் உயிர் தானம் செய்பவர்கள் அதிகம் தேவை என்றும் ராஜமௌலி வேண்டுகோள் விடுத்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »