பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் தம்பி எஹ்சன் கான் லிலாவதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் நேற்று இரவு 11 மணிக்கு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
90 வயதான எஹ்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அல்சைமர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் லிலாவதி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆகஸ்ட் 21 அன்று, தெஸ்பியனின் இளைய சகோதரர் அஸ்லம் கான் லிலாவதி மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. எஹ்சன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.