பிப்ரவரி 24, 2021, 11:20 மணி புதன்கிழமை
More

  ஏர்கன் துப்பாக்கியுடன் விமான நிலையம் வந்த இளைஞரால் பரபரப்பு!

  Home சற்றுமுன் ஏர்கன் துப்பாக்கியுடன் விமான நிலையம் வந்த இளைஞரால் பரபரப்பு!

  ஏர்கன் துப்பாக்கியுடன் விமான நிலையம் வந்த இளைஞரால் பரபரப்பு!

  இந்திய கடன் முழுவதும் தானே செலுத்துவதாக கூறி பரபரப்பை உண்டாக்கிய இளைஞர்

  madurai-air-port-with-gun
  madurai-air-port-with-gun
  • மதுரை விமான நிலையத்தில் 4 ஏர்கன் துப்பாக்கி கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு.
  • இந்திய கடன் முழுவதும் தானே செலுத்துவதாக கூறி பரபரப்பை உண்டாக்கிய இளைஞர்

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு சக்கர வாகனம் மூலம் வந்த இளைஞர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி விசாரணை செய்தனர்! அப்போது அவரிடம் ஒரு ஏர்கன் துப்பாக்கி இருந்தது.

  இது குறித்து அவர்கள் விசாரணை செய்ததில் அவர் வைத்திருந்த பேக்கில் 3 ஏர்கன் துப்பாக்கி மற்றும் 4 செல்போன்கள் இருந்தன .

  madurai-air-port-with-gun1
  madurai-air-port-with-gun1

  அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஸ்வத்தாமன் (வயது 21 )என தெரியவந்தது

  பட்டதாரி இளைஞரான இவர் கல்லூரியில் படிக்கும் போதே என்சிசி இல் இருந்துள்ளார் தற்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.