பிப்ரவரி 24, 2021, 11:59 மணி புதன்கிழமை
More

  வேண்டி பிறந்த இரட்டை குழந்தைகள்! பெண்ணாய் பிறந்ததால் தந்தை கொலை முயற்சி!

  Home சற்றுமுன் வேண்டி பிறந்த இரட்டை குழந்தைகள்! பெண்ணாய் பிறந்ததால் தந்தை கொலை முயற்சி!

  வேண்டி பிறந்த இரட்டை குழந்தைகள்! பெண்ணாய் பிறந்ததால் தந்தை கொலை முயற்சி!

  poison

  தெலுங்கானா மாநிலம் மெஹபூப்நகரில் உள்ள தேசப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கேசவலு என்ற நபருக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் அந்த தம்பதி பல கோவில்களுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிருஷ்ணவேணி கர்ப்பமானார்.

  இதனால் கேசவலு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதிக்கு கிருஷ்ணவேணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அழகான இரட்டை பெண்கள் குழந்தைகள் பிறந்து உள்ளனர்.

  இதனை அடுத்து கேசவலு இந்த குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சியடையாமல் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று கவலைப்பட்டார்.

  இதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்து உள்ளார்.

  அப்போது அங்கு செவிலியர் ஒருவர் வந்து குழந்தைகளை குளிக்க எடுத்து சென்று உள்ளார். இதனை அடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இவர் விஷம் கலப்பது பதிவாகி உள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்