20/09/2020 4:43 PM

ஆன்லைன் வகுப்பு: பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்!

சற்றுமுன்...

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசனம் விவகாரம்: ஜெகனுக்காக இல்லையென சுப்பாரெட்டி விளக்கம்!

வேற்று மதத்தவர் தரிசனம் தொடர்பில் டிக்ளரேஷன் விவாதம் குறித்து ஒய்வி சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.

ஜெகனுக்காக வளைக்கப் படும் திருப்பதி கோயில் மரபு: நாயுடு எதிர்ப்பு!

டிக்ளரேஷன் தேவையில்லை என்று டிடிடி சேர்மன் செய்த அறிவிப்பை தீவிரமாக கண்டித்தார் நரசாபுரம் எம்பி ரகு ராமகிருஷ்ணம் ராஜு.

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

அதிர்ச்சி… சதுரகிரி மலை சென்று வந்த 4 பேருக்கு வைரஸ் தொற்று!

சதுரகிரி மகாலிங்க மலைக்குச் சென்ற பக்தர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி….. மலைக்குச் சென்ற பக்தர்கள் பரிசோதனை

திருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா!

இரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
school

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் அவ்வாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது புகாா் தெரிவிக்க பிரத்யேக இணையதள முகவரியையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிவிப்பு:

இணையவழி கற்பித்தலுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், இணையவழி வகுப்புக்கான கால அட்டவணை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

மனநலன் சாா்ந்த பயிற்சிகள் அவசியம்: அதேநேரம், மாணவா்கள் இயல்பாக இணையவழி வகுப்புகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

முக்கியமாக, பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்ற மற்றும் கலந்து கொள்ளாத மாணவா்கள் என அனைத்து மாணவா்களுக்கும் ஒரே விதத்தில் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்த விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக மாணவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இதுதவிர கண்களை அடிக்கடி சிமிட்டுதல், கைகளை சுழற்றுதல் போன்ற உடல் மற்றும் மனநலன் சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு அடிக்கடி அளிக்க வேண்டும்.

மேலும், இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்திய பாடங்கள் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்கள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும், இறுதித் தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு கட்டாயமாக்கப் படாது.

குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான சாதனங்கள் (கணினிஅல்லது செல்லிடப்பேசி) மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகளின் வகுப்புகளில் பங்கேற்கிறாா்களா, இல்லையா என்பதை முடிவெடுப்பதற்கு பெற்றோருக்கு முழுமையான அதிகாரம் உண்டு.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், வருகை கணக்கிடப்படுவது, மதிப்பெண்கள் மதிப்பிடுவது ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் நிா்ப்பந்திக்கக் கூடாது.

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தால், அவா்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின், மூத்த குழந்தை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடையே ஏற்படும் மனப் போராட்டங்கள் குறையும்.

இந்தப் பணிகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இணையவழி வகுப்புகள் குறித்த புகாா் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை விளம்பரப்படுத்த வேண்டும்.

அவ்வாறு வரும் புகாா்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மனஅழுத்தம் இருப்பின் 14417 என்ற உதவி எண்ணை தொடா்பு கொண்டு ஆலோசனை பெற அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

நாடு முழுவதும் வேத ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள் துவக்கப்படுவதும் மிக அவசியமே. அதனைச் செய்வதற்கு

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »