பிப்ரவரி 24, 2021, 10:44 மணி புதன்கிழமை
More

  உயிருடன் குழந்தையை குழியில் போட்டு மூடிய பயங்கரம்!

  Home சற்றுமுன் உயிருடன் குழந்தையை குழியில் போட்டு மூடிய பயங்கரம்!

  உயிருடன் குழந்தையை குழியில் போட்டு மூடிய பயங்கரம்!

  baby 1

  ஆந்திர மாநிலம் கிருஷ்ணவரம் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக குழந்தை ஒன்றின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் முனகல் கலந்த அழுகையைக் கேட்ட ஒரு பெண், மற்ற கிராமவாசிகளின் உதவியுடன் ஒரு குழியிலிருந்து மீட்டார். குழந்தையை கழுவி, அதன் வாயிலிருந்து மண்ணை அகற்றினர்.

  பின் பத்ராச்சலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர் . தற்போது குழந்தை மருத்துவமனை ஊழியர்களின் பராமரிப்பில் குணமடைந்து வருகிறது .

  இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் குழந்தையை உயிருடன் புதைத்து யாரோ கொல்ல முயற்சி செய்துள்ளனர்.

  ஆனால் அவர்கள் அவசரமாக அடக்கம் செய்ய முயன்றதால் பாதி அடக்கம் செய்த நிலையில் சென்றுவிட்டனர். குழந்தை இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்திருந்தால் உயிரிழந்திருக்கும் என கூறினர்.

  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari