ஏப்ரல் 22, 2021, 7:11 மணி வியாழக்கிழமை
More

  10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர்., வரலாறு!

  நந்தமூரி பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தன் பேஸ்புக்கில் முதல்வருக்கு நன்றி

  telangana-nt-ramaroa
  • தெலங்காணா பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்டிஆர் வாழ்க்கை குறித்த பாடங்கள்…
  • கேசிஆருக்கு நன்றி தெரிவித்த நடிகர் பாலகிருஷ்ணா.
  • என்டிஆர் மீது கேசிஆருக்கு அளவுகடந்த மதிப்பு.
  • சோஷல் ஸ்டடீஸ் பாடத்தில் 268 வது பக்கத்தில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு.
  • மகிழ்ச்சி தெரிவித்து மக்கள் பாராட்டு.

  தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு மறைந்த முதல்வர் என்டிஆர் மீது மிகுந்த கௌரவமும் மதிப்பும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ‘என்டிஆர் ஒரு சரியான ஆண்மகன்’ என்று பல சந்தர்ப்பங்களில் கேசிஆர் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி என்டிஆர் மீது உள்ள மதிப்பால் தன் மகனுக்கு தாரகராமாராவு என்று பெயர் வைத்துள்ளார்.

  இப்போது தெலங்காணா பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் என்டிஆர் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட ஒரு பாடத்தை வைத்துள்ளார். சோஷல் ஸ்டடீசில் 268 ம் பக்கத்தில் என்டிஆர் தொடர்பான முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் வைத்ததற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

  தன் தந்தையின் வாழ்க்கை பற்றி எதிர்கால சந்ததி அறியும் வண்ணம் பாடப்புத்தகத்தில் அறிமுகம் செய்தது குறித்து நந்தமூரி பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தன் பேஸ்புக்கில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

  telangana-nt-ramarao
  telangana-nt-ramarao

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »