ஏப்ரல் 22, 2021, 6:58 மணி வியாழக்கிழமை
More

  மகனுக்கு பெண் பார்க்க சென்ற சுகாதார உதவியாளர்! ஆட்டோவில் வந்தவனால் நேர்ந்த விபரீதம்!

  chopped organ knife

  ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற கொரில்லா என்கிற சார்லஸை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (53.) இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி நாகராஜ் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பேருந்தில் பிராட்வே சென்றுள்ளார்.

  பின்னர் நாகராஜ் ஆட்டோவில் ஏறி அண்ணா ஆர்ச் பகுதியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஆட்டோவில் வந்த நபரொருவர் நாகராஜிடம் அரும்பாக்கம் வழியாக செல்வதாக கூறியதால் ஆட்டோவில் ஏறி உள்ளார்.

  அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே அந்த நபர் ஆட்டோவை விட்டு இறங்கி தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜாவை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் நாகராஜ் மறுத்ததால் அந்த நபர் கத்தியால் தாக்கி கையில் வைத்திருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

  இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜ் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.

  விசாரணையில் அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்த கொரில்லா என்கிற சார்லஸ் (25) என தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்தே ஆட்டோ, பட்டாகத்தி, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »