Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!

குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!

abinavavidhyadhirthar-1

ஜேஷ்ட மஹா சன்னிதானம் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பற்றி மகா சன்னிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் கூறியது

சிறு வயதிலேயே ஸன்யாஸ ஆஸ்ரமம் அபிநவ வித்யா தீர்த்தர் அவர்களுக்கு ஆகி இருந்தது. அதாவது 14 வயதிலேயே. அந்த சிறு வயதிலேயே துர்யாஸ்ரம தர்மங்களை கொஞ்சமும் தவறாமல் அனுஷ்டித்து கொண்டு வந்தார். சாஸ்திரத்தை அத்தியந்த சிரத்தையுடன் அத்தியயனம் செய்தார். பரமகுரு நாதர் சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள் எந்த மார்க்கத்தை காட்டினாலும் அதை கொஞ்சமும் தப்பாமல் அதே மார்கத்தத்தில் செய்து வந்தார். வந்த புதிதில் ஆசிரமங்கள் மடத்து சம்பிரதாயங்கள் இவற்றை சொல்லும்போது ஜேஷ்ட மகாசன்னிதானம் அவர்கள் சுவாமிகளே எனக்கு ஆச்சாரியாள் எதைச் சொன்னார்களோ அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்பார்கள்.

சில சமயத்தில் வயது சிறுவனாக இருந்ததால் தெரியாமல் இது என்ன இப்படி செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் இப்படி நான் என்னுடைய குருவிடம் கேட்டதில்லை என்று சொல்லுவார். அதன்பின் நான் எதையுமே கேட்பதில்லை. அதாவது அவருடைய குரு சந்திரசேகர பாரதி அவர்கள் எந்த மார்க்கத்தை காட்டினார்களோ அதை கொஞ்சமும் தவறாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற விஷயத்தில் அபிநவ வித்யா தீர்த்தர் அவர்கள் மிகவும் விசேஷமான பற்றுதலும் தத்துவத்தையும் கொண்டிருந்தார்கள். அவர் எப்போதும் சொல்வது நாம் ஒரு ஸம்ஸதையை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று இருந்தால் நம்முடைய தனிப்பட்ட முறையில் ஒரு கௌரவத்தையோ ஒரு பிரஸம்ஸையையோ எதிர்பார்க்கக் கூடாது.

நீங்கள் என்னை ஒன்றும் கௌரவிக்க வேண்டாம். நான் எந்த ஸம்ஸ்தையில் இருக்கிறேனோ அந்த ஸ்ம்ஸ்தைக்குத்தான் கௌவுரவம் சேரும் என்று எப்பொழுதும் சொல்வார்கள். நாம் எல்லோரும் சாரதையின் சேவைக்காக வந்திருக்கிறோம். நம்மால் அந்த சாரதா பரமேஸ்வரிக்கு சேவை எவ்வளவு நடந்திருக்கிறது என்று தான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் எனக்கு எவ்வளவு ஸ்வாகதபத்திரிகை வந்திருக்கிறது என்று நாம் கேட்டுக் கொள்ளக் கூடாது. நம்மால் அம்பாளுக்கு என்ன சேவை நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். என்பார்கள். எப்போதும் யதிகௌரவத்துக்கு கொஞ்சமும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு குருநாதரின் உத்தரவின் பேரில் ஆந்திர தேசத்தில் யாத்திரை செய்தேன். ஆந்திர தேசத்தில் சாஸ்திர பாடசாலை சிங்கரிமக கூடியது எதுவுமில்லை என்கிற வருத்தம் ரொம்ப நாளாக இருந்தது. அதனால் ஆந்திரதேசத்தின் தலைநகரில் ஹைதராபாத்தில் ஒரு சாஸ்திரம் பாடசாலை ஆரம்பித்தேன். அங்கே தர்க்கமும் வேதமும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தோம். அந்த பாடசாலைக்கு என் குருநாதர் உடைய பெயரை நான் வைத்தேன். அபிநவ வித்யாதீர்த்த சம்வர்த்தினி சாத்திர பாடசாலை என்று வைத்தேன். சிங்கேரி வந்து ஆச்சாரியாரிடம் தெரிவித்தேன் தபால் மூலம் எல்லாம் தெரிவித்து ஆகிவிட்டது. பின்பு பிரத்தியட்சமாக செல்லும் போது அந்த பாடசாலைக்கு அபிநவ வித்யா தீர்த்த சம்வராத்தினி என்று பெயர் வைத்துள்ளேன் என்று சொன்னேன் அந்த பெயரில் என்ன உண்டப்பா என்று உடனே சொல்லிவிட்டார். இல்லை நான் ஆச்சார்யா முடைய ஸ்மரணம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெயர் வைத்தேன் என்று சொன்னேன். என் பெயர் வைக்கணும்என்று எனக்கு இல்லை என்றார்கள். அப்படி ஒரு யதிகௌரவத்திற்கு கொஞ்சமும் அபேஷிக்காமல் ஸம்ஸ்தையின் முன்னேற்றம் தான் நமக்கு வேணும் என்கிற விஷயத்தில் அவருக்கு ரொம்பவும் தீவிரம்.

அவரிடத்தில் கருணை அசாத்தியமாக இருந்தது. அவருக்கு யார் கஷ்டப்பட்டாலும் பொறுக்க முடியாது. ஒரு சின்ன குழந்தை அழுது கொண்டிருந்தால் அந்த குழந்தைக்கு என்ன வேணும் கேளு என்பார். எவ்வளவு பெரிய விஷயம் ஆனாலும் ஒருவன் வருத்தத்தில் இருக்கிறான் என்று சொன்னால் முதலில் அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பார். வெறும் பேச்சாக இல்லாமல் அதை அப்படியே செய்து காட்டுவார். அனேகர சந்தர்ப்பத்தில் அதனை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சமயத்தில் கூடவே இருந்த சமயம் பெங்களூருக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம் அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் வெள்ளி செம்பில் ஜலம் வைத்துக் கொண்டிருந்தார். கார் போய்க் கொண்டிருந்தது. ஒரு ஆட்டோ ரிக்க்ஷாக்காரன் தெருவில் விழுந்து விட்டான். வாயிலிருந்து நுரை வந்துவிட்டது. ஜேஷ்ட மகா சன்னிதானம் உடனே காரை நிறுத்தி அந்த வெள்ளிசெம்பிலிருந்த ஜலத்தை எடுத்து கொடுங்கள் அவனுக்கு உபசாந்தி ஆன பின்பு நாம் போகலாம் என்று சொன்னார்கள். நான் பக்கத்தில் இருந்து பார்த்த விஷயம் இது. இவருக்கு இருக்கும் தயைக்கு எல்லையே இல்லை என்று நான் தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.

நானும் என்னுடைய குருநாதரும் ராமேஸ்வரம் யாத்திரை போகும் சமயத்தில் மணிமங்கலத்தில் ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் இருந்தார். அவருக்கு தரிசனம் கொடுப்பதற்காக மகா சன்னிதானம் மன்னாடிமங்கலம் சென்றார். அப்பொழுது ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகளுக்கு அவசானதிசை. அவருக்கு குருநாதர் என்னை காண்பித்தார். இவர் என் சிஷ்யன். முத்ராதிகாரி. நன்றாக சாஸ்திரம் படித்திருக்கிறார் என்று சொன்னார்கள். அப்போது ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் என்னிடம் சொன்னார் உலகத்தில் கருணை என்று பார்க்க வேண்டும் என்று சொன்னால் இங்கு தான் பார்க்க வேண்டும் என்று எனது குருநாதரை காண்பித்தார். அதற்கு ஒரு உதாரணம் சொன்னார். அவருக்கு பேச முடியாத உடல்நிலை ஆனாலும் குருநாதர் விஷயத்தில் அவர் அதீதமான பக்தியும் சிரத்தையும் அவரை அந்த சமயத்தில் பேச வைத்தது.

ஒரு சமயம் மடத்தில் வேலைக்காரன் பெரிய தப்பிதம் செய்தான். தப்பிதம் பண்ணியவுடன் அவனை மடத்தில் இருந்து விலக்க வேண்டும் என்று எல்லோரும் தீர்மானம் பண்ணினார்கள். குருநாதர் மடத்தில் இருந்த அவரை விட வேண்டாம் வேலையை மாற்றிக் கொடுத்தால் போச்சு என்று சொன்னார்களாம். அவன் இந்த வேலைக்கு தகுதி இல்லை என்றால் வேறு வேலை கொடுத்தால் போச்சு. இவனை நீக்கி விளக்கினால் இவனையே நம்பிக் கொண்டிருக்கின்ற நாலுபேர் இவர்கள் வீட்டில் இருப்பார்கள் அவர்கள் கதி என்ன ஆகும். இவனுடைய சம்பாத்தியத்தில் சாப்பிடுவது என்று இவன் வீட்டில் நாலைந்து பேர் இருக்கிறார்களே அவர்களுடைய கதி என்னவாகும். இவனை விளக்குவது நியாயம் இல்லை வேறு ஒரு வேலை கொடுங்கள் என்று கூறினார்கள். இந்த வார்த்தை யாருடைய வாயிலிருந்து வரும் மகான் வாயில் இருந்துதான் இந்த வார்த்தை வர முடியும். கருணை என்று சொன்னால் அது இவரிடம்தான் பார்க்க முடியும் என்று நேரடியாக குருநாதரை பற்றி அவர்கள் கூறினார்கள்.

1931 ஆம் வருஷம் சன்யாச ஆஸ்ரமம் ஸ்வீகாரம் செய்தார் 54 ஆம் வருஷம் வரை குருநாதர் உடன் 23 வருடங்கள் நிழல் மாதிரி இருந்து அவர்களிடமிருந்து ஆசிரம தர்மங்கள் மடத்தின் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார். 56 வது வருஷம் யாத்திரை கிளம்பினார். 62 ஆம் வருஷம் 6 வருடங்கள் வரை தக்ஷிண தேசத்தில் அதாவது ஆந்திர திராவிட கர்நாடக கேரள இடங்களில் சஞ்சாரம் செய்தார்கள். 64 ஆம் வருடம் யாத்திரை புறப்பட்டார்கள். மறுபடியும் 68 வது வருடம் வரையிலும் அது பாதி தட்சிண பாரதம் பாதி உத்திர பாரதம் யாத்திரை செய்தார்கள். இந்த இரண்டு யாத்திரையிலும் அவர் சாதித்த காரியங்கள் எத்தனையோ.. அவரிடம் அவருடைய அனுகிரஹம் பெற்றவர்கள் எத்தனையோ பேர். அவருடைய இன்னொரு ஸ்வாபத்தை நாம் இந்த சமயத்தில் சொல்லவேண்டும். அவரால் எத்தனை பேருக்கு உபகாரம் நடந்தது என்றாலும் அதை அவர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதே சமயம் அவருக்கு யாராவது கொஞ்சம் உபகாரம் பண்ணினாலும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

மதுரையில் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டார். ஆபத்து என்றால் பூத சம்பந்தமான ஆபத்து அதிலிருந்து அவர்கள் எப்படி விடுதலை ஆவது என்று சாத்தியமாகவில்லை. அவர் என்னுடைய குருநாதரிடம் வந்தார். நீங்கள் திருநெல்வேலிக்கு வாருங்கள் உங்களுக்கு உபதேசம் கொடுக்கிறேன் என்று கூறினார்கள். அவரும் வந்தார். உபதேசம் கொடுத்தார்கள். அவர் ரொம்ப சிரத்தையாக ஜபித்துக் கொண்டு வந்தார் அந்த உபத்திரம் எப்படி போனது என்று தெரியாமல் போய்விட்டது. ரொம்ப அதிசயமாக இருந்தது. அவர் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் குருநாதர் அவருக்கு ஒரு உத்தரவு போட்டார்கள் நீங்கள் இதை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அவருக்கு வாயை கட்டியது போல் ஆகிவிட்டது. அவர் இன்றும் என்னிடம் கூறுவார் குருநாதர் பண்ணிய அனுக்கிரகத்தை எல்லா இடத்திலும் சென்று சொல்ல முடியாமல் குருநாதர் அவர்கள் வாயை கட்டி போட்டு விட்டார்கள் என்று. குருநாதருக்கு என்னவென்றால் உபகாரம் செய்வது யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. அட்வடைஸ்மென்ட் தேவையில்லை. நம்மால் ஒருவனுக்கு உபகாரம் பண்ண முடிந்தது என்றால் அது போதும் அதற்கு எந்தவிதமான பிரச்சாரமும் தேவையில்லை. இப்படிப்பட்ட அது உத்தமமான சுபாவம் குருநாதர் உடையது அவரை அவருடைய இன்னொரு சுபாவம். எனக்கு சன்யாசம் கொடுக்கும்பொழுது குருநாதரிடம் ஒருவர் கேட்டார் பையனுடைய ஜாதகம் பார்த்தீர்களா என்று. அதற்கு குருநாதர் சொன்னார் ஜாதகம் பார்த்து சன்யாசம் கொடுக்கிற அபிப்ராயம் எனக்கு இல்லை என்றார்‌. யக்தியைப் பார்த்து அவனுக்கு வைராக்கியம் இருக்கிறதா தைரியசம்பத் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர ஜாதகம் பார்த்து விட்டு சன்யாஸ யோகம் இருக்கிறது என்று நினைத்து நான் கொடுத்து, அவன் ஏதாவது ஒரு அக்கிரமம் பண்ணி விட்டால் எங்கே போவது? அதனால் யக்தியை அவனுடைய யோக்யதையை நாம் ப்ரத்யக்ஷமாக பார்க்க வேண்டும். அதனால் இன்றுவரை ஜாதகத்தை பார்க்கவும் இல்லை எடுக்கவும் இல்லை என்றார்கள்.

ஜகத்குரு என்ற பெயருக்கு பொருத்த மிக்கவர்கள் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜேஷ்ட மகா சன்னிதானம் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். தீன ரட்சகராக திகழ்ந்தவர்கள். தன்வந்திரி வைத்தியசாலை இதற்கு ஒரு சிறந்த சான்று. சாதாரண ஜனங்களுக்கு சிறந்த முறையில் வைத்திய வசதிகளை அளிக்கிறது இந்த நிறுவனம்.

IMG_20200717_163323_354

டாக்டர் சுபலட்சுமி அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவர் இந்த வைத்தியசாலையில் வைத்திய ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ஒரு பெண்ணிற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு மகப் பேறு கிடைத்தது. ஆனால் பிறந்த சிசு மஞ்சள் குழந்தையாக இருந்தது அது டாக்டருக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவர் மகா சன்னிதானம் அவர்களை தரிசித்து ஆசி பெற்று வைத்தியத்தை தொடங்கினார். பிறந்த ஆண்குழந்தை ஓ நெகடிவ் வகையை சேர்ந்தது இரத்தம் அறிய குரூப் நல்லவேளையாக டாக்டருக்கும் அவர் தாயருக்கும் அதே வகை அரிய இரத்தம். சற்றும் தாமதியாமல் குழந்தையின் ரத்தத்தை வெளியேற்றி புதிய ரத்தத்தை செலுத்த ஏற்ற ஏற்பாடுகள் நடந்தன. மூன்று நாட்கள் இந்த சிகிச்சை தொடர்ந்து. மூன்றாம் நாளிரவு தொடர்ந்து குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டு கொண்டிருந்தது. இரவு நேர டியூட்டி டாக்டரும் உடன் இருந்தார்கள். களைப்பு மிகுதியால் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின் வருவதாகவும் கவனமாக இருக்கவும் சொல்லி விட்டு டாக்டர் சுபா அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். கலப்பின் மிகுதியால் தூங்கிவிட்டார்கள். அப்பொழுது சுபா தூங்காதே எழுந்திரு உடனே புறப்படு என்ற குரல் கேட்டது. தொட்டிலில் இருந்த குழந்தை படும் அவஸ்தையும் காட்சியாக தெரிந்தது. உடனே எதிரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தார் டாக்டர். குழந்தை மூச்சு திணறி திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. நர்ஸ் காபி குடிக்க போயிருந்தாள். ட்யூட்டி டாக்டர் தூங்கியிருந்தாள். குழந்தைக்கு ட்ரிப் முடிந்திருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது உடனே செய்ய வேண்டியதை செய்து குழந்தையை பிழைக்க வைத்தார் டாக்டர். ஆச்சாரியார் டாக்டரை எழுப்பி குழந்தைக்கு பூரண அனுகிரகம் செய்திருக்கிறார்கள். விடிந்ததும் டாக்டர் சுபா மகாசன்னிதானம் அவர்களை தரிசித்து நமஸ்கரித்தார்கள். அந்த டாக்டரை மாற்றி விடுமாறு கூறினார்கள். டாக்டர் சுபா பேசும் முன்னே ஆச்சாரியார் இவ்வாறு கூறினார்கள் என்றால் சுபாவின் சவாலுக்கும் குழந்தைக்கும் எத்தனை உயர்ந்த கருணை வள்ளலாக வாரி வழங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இதேபோல் நாம் ஒவ்வொருவருக்குமே குருநாதர் அவர்களின் அனுபவம் ரக்ஷித்து நம்மை வாழவைக்கிறது. அவர்கள் அருட்பரிவிற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குருநாதர்களின் திவ்ய பாதாரவிந்தங்களில் பரிபூர்ணமாக சரணடைந்து நாம் எல்லோரும் பணிந்து நிற்போம். அவருடைய அனுகிரஹத்தை பெறுவோம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version