29/09/2020 11:03 AM

ஃபேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி.. ஏமாற்றிய சிறைக்காவலர்!

சற்றுமுன்...

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சீமான் அனுமதி

  உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...

மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
facebook under watch

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார் ஒரு பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் போது நேரில் சந்தித்து உள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் தனக்கே உரிய பாணியில் காதல் வார்த்தை பேசி அள்ளி வீசுகிறார் கணேஷ்குமார்.

தன் காதலனை நம்பி அந்த இளம் பெண்ணும் அவரின் அழைப்பை ஏற்று வேலூருக்கு செல்லவே, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறி இருக்கிறார் சிறைக்காவலர்.

பின்னர் மயக்க நிலையில் ஆடைகளின்றி இருந்த பெண்ணை, செல்போனில் படம் எடுத்து கொண்ட அவர். அதை காட்டி மிரட்டியே பல முறை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறவே தன் நிஜ முகத்தை காட்டி இருக்கிறார் சிறைக்காவலர். உன்னை போலவே பல பெண் என் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் எனக் கூறி செல்போனை காட்டியுள்ளார்.

அதில் ஏராளமான பெண்களின் நிர்வாண போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்த பெண். இதனிடையே சிறைக்காவலருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவே. அவரின் ஊருக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை விரட்டி அடிக்கவே. செய்வதறியாது திகைத்து போன அவர், காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது அவருக்கு.

ஜெயில் வார்டன் எனக்கு போலீஸ் மட்டுமின்றி ரவுடிகளும் நிறைய பேரையும் தெரியும் என கூறியுள்ள சிறைக்காவலர் அவர்களை வைத்தே உன் கதையை முடித்து விடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இருந்தபோதிலும் தன்னைப்போல ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியலை எல்லாம் சேகரித்துள்ளார் அந்தப் பெண். பெங்களூருவில் செவிலியர், ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவி என சிறைக் காவலர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியலை சேகரித்த அந்தப் பெண் அதையெல்லாம் ஆதாரமாக மாற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இவர்கள் எல்லோருமே பேஸ்புக் மூலமாக பழகி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பணக்கார வீட்டுப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்து, உல்லாச வாழ்க்கையிலும் சிறை காவலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் அதிர்ந்து போன போலீசார் சிறை காவலர் கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் தலைமறைவான அவரை தேடும் பணி நடைபெற்று வந்தபோதிலும் இந்த விவகாரம் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூரில் இருந்து வந்தவாசிக்கு அவரை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவர் பணிக்கு வராததால் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை ?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறைக்காவல் இந்த செயலால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

கலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்!

தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க "சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »