பிப்ரவரி 24, 2021, 11:16 மணி புதன்கிழமை
More

  செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!

  Home சற்றுமுன் செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!

  செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!

  கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது

  கொரோனா விவரம்
  கொரோனா விவரம்

  தமிழகத்தில் இன்றைய பட்டியலின் படி, 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும் 53 பேர் கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர் என்று தமிழக  அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5752 என்று உள்ளது. இதை அடுத்து  இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்துள்ளது.

  சென்னையில் இன்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 991 என்று சுகாதாரத் துறையின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 149583  ஆக அதிகரித்துள்ளது!

  கொரோனா தொற்றுக்கு இன்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 19 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 34 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை /8,434  ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து இன்று 5,799 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது 

  கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80 ஆயிரம் மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது.

  மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் விவரம்:

  districtwise-corona-details-sep-14