ஏப்ரல் 23, 2021, 8:45 காலை வெள்ளிக்கிழமை
More

  அலைபாயுதே ஸ்டைலில் திருமணம்! அறியாத பெற்றோர் ஏற்பாடு செய்த மற்றொரு திருமணம்.. இறுதியில் நடந்தது..

  Kanyakumari

  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி (23). பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்த இவர் தருமபுரியில் பணிபுரிந்த போது, ராஜூ என்ற இளைஞரை காதலித்தார்.

  இவர்கள் காதல் வீட்டிற்கே தெரியாமல் திருமணம் வரை சென்றது. ராஜு – ஷாமிலி இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பரில் தருமபுரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் கொண்டனர். எனினும் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

  இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் காதலர்கள் சந்திக்க முடியாமல் போனது. அதேநேரத்தில் ஷாமிலிக்கு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்தது.

  இது குறித்து, ஷாமிலி தனது காதல் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து நிகழ்ச்சியில் கலந்துகொள் நான் வந்துவிடுகிறேன் என கூறியுள்ளார். அதேபோன்று நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  அப்போது மண்டபத்தில் இருவீட்டாரும் பரபரப்பாக உறவினர்களை வரவேற்றும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வேலை செய்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் அங்கு போலீசார் திடீரென குவிந்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பதற்றம் தொற்றியது.

  தருமபுரியில் இருந்து வந்த காதல் கணவர் ராஜு தனது மனைவிக்கு 2ஆவது திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக காவல்நிலையத்தில் புகைப்படங்களுடன் புகார் அளித்தார்.

  இதனை பெற்றோர்களிடம் போலீசார் கூறியதால் இருவீட்டாருக்கும் பெரும் அதிர்ச்சி. மேலும் ஏற்கனவே திருமணம் செய்ததற்கான புகைப்படங்களையும் காட்டினர். இதனால் பெண் மற்றும் திருமண வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  அனைவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஷாமிலி, ராஜூவுடன் தான் செல்வேன் என கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சேர்த்து அனுப்பி வைத்தனர். இதனால் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது.

  நிச்சயதார்த்தம் பொழுதே வீட்டில் அந்தப் பெண் இதனை கூறி இருந்திருக்கலாம் இதனால் இரு வீட்டாருக்கும் நிகழ்ந்திருக்கும் அவமானமும் பொருட்சேதமும் மன அழுத்தமும் இல்லாத இருந்திருக்கும். படித்திருந்தும் இந்த எண்ணம் கூட இல்லாது எப்படி இளைஞர்கள் நடந்து கொள்கிறார்கள். இதுவெல்லாம் சினிமாவைப் பார்த்து செய்யும் செயல்களா என மக்கள் வருந்துகிறார்கள்.

  அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு அவமானம் நேரம் என்பதோ பின்னாளில் அவரது திருமண ஏற்பாடுகளில் இந்நிகழ்வு முக்கிய சங்கடங்களில் ஆழ்த்தும் என்பது எப்படி தெரியாமல் சென்றது. பெற்றோரை ஏமாற்றியது இல்லாமல் சம்பந்தமே இல்லாத ஒரு மூன்றாவது குடும்பத்தையும் அல்லவா அவமானப்படுத்தகிறோம் என்பது எப்படி தெரியாமல் போயிற்று.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-