― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசெப்.15: இன்று விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்! இந்திய இஞ்சினியரிங் தினம்!

செப்.15: இன்று விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்! இந்திய இஞ்சினியரிங் தினம்!

- Advertisement -
visvesraiyah

இன்று செப்டம்பர் 15 இந்திய இஞ்சினியரிங் தினம். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்.

மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இன்ஜினியரிங் துறை முதுகெலும்பு போன்றது. இன்றைய நவீன பாரதத்திற்கு இன்ஜினியரிங் அடித்தளம் அமைத்த மகனீயர் பாரதரத்னா மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா.

நம் தேசத்திற்கு இவர் அளித்த சேவைகள் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியவை. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் இன்ஜினியரிங் டே நல்வாழ்த்துக்கள்.

மனித வாழ்க்கைப் பயணத்தில் இன்ஜினியரிங் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது. அணைக்கட்டுகள், டேங்க்கள், ரயில்வே பாலங்கள், சுரங்க வழிகள், சாலைகள் இவ்வாறு பல துறைகளில் இன்ஜினியரிங் நிபுணர்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுள் பாரத நாடு பெருமைப்படத்தக்க இந்தியா வின் சொந்தமகன் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இன்ஜினியராக இவர் நம் நாட்டின் புகழை உலகெங்கும் பரப்பினார்.

இந்தத் துறையில் மிக உயர்ந்த சிகரங்களை எட்டி உலகப் புகழ்பெற்ற நிர்மாணங்களை ஏற்படுத்தினார். அவருடைய வழிகாட்டுதலில் ஏற்பட்ட நிர்மாணங்கள் இன்றைக்கும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இந்தியாவின் மிகச்சிறந்த இன்ஜினியரான இவருடைய பிறந்தநாளை செப்டம்பர் 15 அன்று நாடெங்கும் இன்ஜினியரிங் டே கொண்டாடுகிறோம்.

gt-naidu-visvesraiya

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா செப்டம்பர் 15, 1861 சிக்கபல்லப்பூர் அருகிலுள்ள முத்தெனஹள்ளியில் பிறந்தார். இவருடைய மூதாதையர் பிரகாசம் மாவட்டம் பஸ்தவாரிபேட்ட மண்டலம் மோக்ஷகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

விஸ்வேஸ்வராய்யாவின் தந்தையார் ஒரு பள்ளி ஆசிரியர். விஸ்வேஸ்வரய்யா தன் பன்னிரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்தார். அந்த துயரத்தை தாங்காமல் இருந்தாலும் பெங்களூரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின் 1881 இல் டிகிரி படித்து முடித்தார்.

அதன்பின் புனேவில் உள்ள காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சேர்ந்தார். சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்தார். பம்பாயில் சில நாட்கள் பணிபுரிந்த பின் இன்டியன் இர்ரிகேஷன் கமிஷனில் சேர்ந்தார். அப்போதுதான் இந்திய நாடு ஒரு மேதையை அடையாளம் கண்டறிந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் கட்டமைப்பில் மிக முக்கிய பாத்திரம் வகித்தார் விஸ்வேஸ்வரய்யா. அணைகளை கட்டுவதிலும் பொருளாதார நிபுணராகவும் நிரந்தரமான கீர்த்தியை சம்பாதித்தார். இன்ஜினியராக வாழ்க்கையை தொடங்கிய டாக்டர் விஸ்வேஸ்வரய்யா நாட்டு முன்னேற்றத்திற்கு உதவும் பலவித நீர்நிலை ப்ராஜெக்ட்டுகளுக்கு வடிவம் கொடுத்தார்.

1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக பணிபுரிந்த விஸ்வேஸ்வரய்யா மைசூர் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) நிர்மாணித்தார். மைசூர் ஒரு எடுத்துக்காட்டு நகரமாக மாறி இருப்பதில் இவருடைய பாத்திரம் மிக அதிகம்.

ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களில் அண்டர்கிரவுண்ட் டிரைனேஜ் அமைப்பின் வடிவமைப்பு, விசாகப்பட்டினம் துறைமுகம் ஏற்படுத்துவதில் இவர் அளித்த சேவைகள் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியவை.

நாட்டு முன்னேற்றத்தில் இவருடைய சேவைகளை அடையாளம் கண்ட பாரத அரசாங்கம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு 1955இல் பாரத ரத்னா விருது அளித்து கௌரவித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மிக உயர்ந்த விருதான ப்ரிடிஷ் நைட்ஹுட் அளித்து விஸ்வேஸ்வரய்யாவை கௌரவித்தது. அதனால் அவர் பெயருக்கு முன்பு சர் என்ற பட்டம் சேர்ந்தது.

நிதி உதவியோடு புனேயில் இன்ஜினியரிங் படித்து முடித்த விஸ்வேஸ்வரய்யா பம்பாய் மாநில அரசாங்கத்தில் பப்ளிக் ஒர்க்ஸ் துறையில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் ஆக வேலையில் சேர்ந்தார்.

ஓராண்டிற்குள்ளாகவே எக்சீக்யூடீவ் பொறியாளராக உயர்ந்தார். விஸ்வேஸ்வரய்யாவின் பணித்திறன் மிக அற்புதமாக இருந்ததால் சுக்கூர் அணைக்கட்டு கட்டுவதற்காக அவர் என்ஜினியராக நியமிக்கப்பட்டார். சிந்து நதி நீர் சுக்கூருக்குச் சேரும் படியாக செய்ததில் விஸ்வேஸ்வரா மிக முக்கிய பாத்திரம் வகித்தார்.

1909இல் மைசூர் அரசாங்கம் விஸ்வேஸ்வரய்யாவை தலைமை பொறியாளராக நியமித்தது. மைசூர் அருகில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுக்கு இவர் பொறியாளராக பணிபுரிந்தார் .

1900 ல் மூசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஹைதராபாத் நகரம் பரிதவித்தது. வெள்ளத்திலிருந்து ஹைதராபாதைக் காப்பாற்றும் பொறுப்பை நிஜாம் நவாபு விஸ்வேஸ்வரய்யாவிடம் ஒப்படைத்தார். விஸ்வேஸ்வரய்யாவின் ஆலோசனைப்படி மூசி நதி மீது மேல்மட்டத்தில் ரிசர்வாயர் நிர்மாணித்தார்கள்.

நீர்நிலைகளின் நிர்மாணத்தால் நகரத்திற்கு ஏற்படவிருந்த அழிவு தப்பியது. ஹிமாயத் நகர், உஸ்மான்நகர் ரிசர்வாயர்கள் தற்போது ஹைதராபாத்தில் மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறன்றன.

நிஜாம் நவாபு விண்ணப்பத்தை ஏற்று ஹைதராபாத்துக்கு கழிவுநீர் நீரோட்டத்திற்கு சரியான அமைப்பை விஸ்வேஸ்வரய்யா வடிவமைத்துக் கொடுத்தார்.

விசாகப்பட்டினம் கப்பல் துறைகயை கடலின் அழிவிலிருந்து காப்பாற்றும் அமைப்பை வடிவமைப்பதிலும் விஸ்வேஸ்வரய்யா முக்கிய பங்கு வகித்தார். விசாகப்பட்டினம் கப்பல் துறை நிர்மாணத்தின் போது அலைகளின் தாக்குதல் அதிகமாக இருந்தது.

அலைகளின் தீவிரத்தை குறைப்பதற்காக அவர் ஒரு அறிவுரை கூறினார். இரண்டு பழைய கப்பல்களில் பாறாங்கற்களைப் போட்டு கடற்கரையின் அருகில் மூழ்கியிருக்கும்படி செய்தார். அவ்வாறு செய்தால் அலைகளின் தீவிரம் குறைந்தது . சில நாட்களுக்குப் பிறகு கான்கிரீட்டால் பிரேக் வாட்டர்ஸ் நிர்மித்தார்.

திருப்பதி மலைச்சாலை ஏற்பாட்டுக்கு விஸ்வேஸ்வரய்யா முயற்சி செய்தார்.

இன்ஜினியராக, மைசூர் திவானாக, மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா செய்த சேவைகளை அடையாளம் கண்டு 1955 ல் அவருக்கு பாரத ரத்னா விருது அளித்து கௌரவித்தது.


  • இந்திய பொறியியலாளர்கள் நம் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், உலகைக் கட்டமைப்பதிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
  • மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பீகாரில் குடிநீர், கழிவு நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பட்டு வருகின்றன
  • இந்திய பொறியியலாளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி
https://twitter.com/mannkibaat/status/1305779438240448512

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version