Home அடடே... அப்படியா? வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்! வட்டி, விதிமுறைகள்..!

வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்! வட்டி, விதிமுறைகள்..!

bank

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில், குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத (zero balance ஜீரோ பேலன்ஸ்) வங்கிக்கணக்கு.

இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கில் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கத் தேவை இல்லை. பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் எனப்படும் இந்த ஜீரோபேலன்ஸ் கணக்கு ஏழை மக்கள் எளிதில் வங்கியில் கணக்கு தொடங்க முடியும். இதன்மூலம் எந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

இந்த கணக்கை தொடங்க அடிப்படை ஆதாரங்கள் வைத்திருந்தாலே போதுமானது.

இதில் தனியாகவும், இரண்டு பேர் சேர்ந்தும் ஜாய்ண்ட் அக்கவுண்ட் கூட வைத்துக்கொள்ளலாம். இதில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலே போதும். நாம் மற்ற கணக்குகள் போல இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே வட்டியைத்தான் இந்த கணக்கிற்கும் வழங்குகிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட மாட்டாது.

ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்க வேண்டுமானால் நாம் மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால், புதிய கணக்கை தொடங்கும் 30 நாட்களுக்கு முன்பே அந்த பழைய கணக்கை வேண்டாம் என வங்கியில் சொல்லி முறைப்படி மூடியிருக்க வேண்டும்.

எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் கணக்குதாரர்கள் மாதம் 4 முறை பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த 4 முறையில் ஏடிஎம்-யில் பணம் எடுப்பதும் அடங்கும். ஏடிஎம் கார்டு வழங்கப்படும். ஆனால், அதற்காக பராமரிப்பு தொகை எதுவும் இருக்காது. இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்களாக எந்த பணப்பரிவர்தனையும் செய்யாமல் இருந்தாலோ அல்லது கணக்கை வேண்டாம் என மூட நினைத்தாலோ அதற்காக எந்தவிதமான பணமும் கட்டத் தேவையில்லை.

எஸ்பிஐ 18 வயதுக்கு உட்பட்டோருக்காக பெஹ்லா கடாம் மற்றும் பெஹ்லி உதான் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை (pehla kadam and pehli udaan zero balance) வைத்துள்ளது. இவர்கள் மாத சராசரி இருப்பும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கணக்கை ஆரம்பிக்க எந்தவிதமான ஆதாரங்களும் தேவையில்லை. ஆனால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதற்கான ஆதாரத்தை மட்டும் காட்டினால் போதும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version