30/09/2020 8:11 AM

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள்: ஓய்வி சுப்பாரெட்டி!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள் என்று ஒய் வி சுப்பாரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்றுமுன்...

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை!

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..

விரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்! தமிழிசை நம்பிக்கை!

வாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக

சூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

இந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.

மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்
yv-subbareddy-met-nirmala-sitharaman
yv-subbareddy-met-nirmala-sitharaman

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள் என்று ஒய் வி சுப்பாரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமலை கோவிலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஸ்பெஷல் பாதுகாப்பு பிரிவிற்கு பாக்கியுள்ள 23.78 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஓய்வி சுப்பாரெட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விண்ணப்பம் செய்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று தில்லியில் அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இது குறித்து விண்ணப்பப் பத்திரம் அளித்தார். ஜிஎஸ்டி ரத்து செய்வதால் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு மேலும் பொருளாதார பலம் கிடைத்து பல சமுதாய, கல்வி, தர்ம நிகழ்ச்சிகளை இன்னும் அதிகமாக நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஓய்வி சுப்பாரெட்டி கோரிக்கை வைத்தார்.

திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கைகள் சமர்ப்பித்த ரூபாய் 500 ரூபாய் 1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியிலும் டெபாசிட் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி அமைச்சரைக் கோரினார்.

மத்திய அரசாங்கம் 2016 நவம்பர் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணமில்லாத கொடுக்கல் வாங்கல்களை உற்சாகப்படுத்துவது குறித்து பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். ஆனால் பக்தர்கள் அதன்பின் கூட ஶ்ரீவாரி உண்டியல் மூலம் ரத்து செய்த நோட்டுகளை காணிக்கையாக சமர்ப்பித்து வருகிறார்கள்.

பக்தர்களின் மன உணர்வோடு இணைந்துள்ள அம்சம் ஆனதால் பக்தர்கள் இந்த நோட்டுகளை உண்டியலில் சமர்ப்பிக்காமல் தடுக்கும் ஏற்பாடுகள் செய்ய முடியாமல் போனது என்று அவர் விவரித்தார். பல வங்கிகளில் லேவாதேவி நடத்திவரும் டிடிடி உண்டியல் மூலம் கிடைக்கும் காணிக்கைகளுக்கு அதிகாரப் பூர்வமாக ரெக்கார்டுகள் வைத்துள்ளது என்று அமைச்சரிடம் விவரித்தார்.

டிடிடி யிடம் சேர்ந்துள்ள நிலுவையில் உள்ள இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் வரும் ஆதாயத்தால் இன்னும் பல தார்மிக சேவை நிகழ்ச்சிகள் நிர்வகிக்கலாம் என்று சுப்பாரெட்டி கூறினார். பழைய நோட்டுகளை மாற்றுவது குறித்து 2017 ல் இருந்து டிடிடி பலமுறை மத்திய நிதி அமைச்சகத் துறைக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடிதங்கள் எழுதி விண்ணப்பித்தாலும் அனுகூலமான பதில்கள் வரவில்லை என்று அவர் கூறினார்.

பக்தர்களின் மன உணர்வுகளோடு தொடர்புள்ள இந்த அம்சம் குறித்து அனுகூலமான முடிவு எடுத்து டிடிடி யிடம் நிலுவையில் உள்ள பழைய நோட்டுகளை ரிசர்வ் பேங்க் களிலோ அல்லது பிற வங்கிகளிலோ டெபாசிட் செய்வதற்கு தகுந்த உத்தரவுகளை கொடுக்க வேண்டும் என்று அவர் மத்திய நிதி அமைச்சரிடம் கோரினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!

இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »