Home இந்தியா கொரோனாவை எதிர்த்து போராடிய… திருப்பதி எம்பி பல்லி துர்கா பிரசாத் காலமானார்!

கொரோனாவை எதிர்த்து போராடிய… திருப்பதி எம்பி பல்லி துர்கா பிரசாத் காலமானார்!

tirupati-mp-durga-prasad
tirupati-mp-durga-prasad
  • திருப்பதி எம்பி பல்லி துர்கா பிரசாத் காலமானார்.
  • கொரோனாவுக்காக சிகிச்சை பெறும்போது புதன்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார்.

திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி துர்காபிரசாத் (64 ) புதன்கிழமை மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார்.

அண்மையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் துர்கா பிரசாத் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருக்கும்போதே புதன்கிழமை மாலை துர்கா பிரசாத் கடினமான மாரடைப்பால் காலமானார்.

துர்கா பிரசாத் 28 வயதில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லூர் மாவட்டம் கூடுரு தொகுதியிலிருந்து நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். பல்லி துர்கா பிரசாதின் சொந்த ஊர் நெல்லூரு மாவட்டம் வெங்கடகிரி.

1985ல் அரசியலில் பிரவேசித்தார். 1994ல் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக பணிபுரிந்தார்.

அதன்பின் 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேர்ந்து திருப்பதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துர்கா பிரசாத் மரணம் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து துர்கா பிரசாத் மகனோடு போனில் உரையாடினார்.

முதல்வர் ஒய்எஸ் ஜகன், திருப்பதி எம்பியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
துர்கா பிரசாத் மரணம் தீராத இழப்பு என்றார்.

திருப்பதி எம்பி பல்லி துர்கா பிரசாத் மறைவு குறித்து பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர், திருப்பதி பார்லிமென்ட் எம்பி பல்லி துர்கா பிரசாத் மறைவு குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version